மேலும் அறிய

'உதயநிதிக்கு கச்சத்தீவுக்கு ஸ்பெல்லிங் தெரியுமா? வரலாறு தெரியுமா?' சி.வி.சண்முகம் எம்.பி ஆவேச பேச்சு..!

மரக்காணத்தில் 19 மீனவ கிராமத்தினர் பயன்பெறும் வகையில் அதிமுக அரசு கொண்டு வந்த மீன்பிடி துறைமுகத் திட்டத்தை நிறுத்திய திமுக அரசை கண்டித்து சி.வி.சண்முகம் எம்.பி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த  அழகன்குப்பம் கிராமத்தில் 19 மீனவ கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த ஆட்சியில் இருந்த அதிமுக அரசு  ரூ.235 கோடி மதிப்பில்  மீன்பிடித் துறைமுகம் கட்ட அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கிய நிலையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்பாயத்தில் தொடரப்பட்ட  வழக்கை தொடர்ந்து இந்த கட்டுமானப்பணியை திமுக அரசு நிறுத்தியுள்ளது.

இதனால் கோட்டக்குப்பம், மற்றும் மரக்காணம் காவல் நிலைய, எல்லைக்குட்பட்ட 19 கிராம மீனவர்கள், விழுப்புரம் மாவட்டத்தில் 40 கி.மீட்டர் தூரம் கடல் பரப்பளவு உள்ள பகுதியில் பெரிய படகுகளை நிறுத்த எந்த வசதியும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்:

அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் இந்த வழக்கை முறையாக கையாளாமல் திமுக அரசு அதனை ரத்து செய்தது கண்டித்தும், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உட்பட மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் திமுக அரசை கண்டித்து அம்மாவட்ட அதிமுக செயலாளரும் எம்.பியுமான சி.வி.சண்முகம் தலைமையில் மரக்காணம் பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

காழ்ப்புணர்ச்சி:

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக எம்.பி சிவி.சண்முகம் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 4 ஆயிரம் படகுகள் பயன்படுத்தும் 50 ஆயிரம் மீனவ குடும்பத்தினர் படகுகளை நிறுத்த முடியாமலும் பராமரிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர் சென்னையை விட்டால் அடுத்தது புதுச்சேரியில் தான் மீன் பிடித்துறைமுகம் அமைந்துள்ளது. அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் வேறு ஒருவரைக்கொண்டு வழக்கை போட்டு வனங்கள் பாதிக்கப்படும் என திமுக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதிமுக அரசு மீதான காழ்ப்புணர்சியோடு தான் இந்த திட்டத்தை நிறுத்தியுள்ளது.

உதயநிதிக்கு ஸ்பெல்லிங் தெரியுமா?

எந்த திட்டம் போட்டாலும் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் என்ன பயன் கிடைக்கும் என்று தான் திமுக அரசு நினைக்கின்றது. கடலில் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் அமைக்க மட்டும் அனுமதி பெறும் திமுக, அரசு மீன் பிடிப்படகு நிறுத்துமிடத்திற்கு கட்டுமானப்பணியை துவக்க சட்டரீதியாக ஏன் எதிர்கொள்ளவில்லை என கேள்வியெழுப்பினார்.

உதயநிதிக்கு கச்சத்தீவிக்கு ஸ்பெல்லிங் தெரியுமா? வரலாறு தெரியுமா? தாத்தா தாரை வார்த்து கொடுத்த வரலாறு தெரியுமா? குலத்தொழில் என்கின்றனர் கோபாலபுரத்தில் தான் குலத்தொழில் உள்ளது. திமுக தொண்டர்கள் அடிமைகளாக உள்ளார்கள். குலத்தொழிலை கடைபிடிக்கும் ஒரே கட்சி திமுக இவர்கள் யாரையும் பேச தகுதியில்லை. மிஸ்டர் உதயநிதி, மிஸ்டர் உதயநிதி இது சூட்டிங் பாயிண்ட் இல்லை நீ அமைச்சர். மதங்களை இழிவுப்படுத்தும் வேலையினை செய்து வருகின்றாய். மதத்தை புண்படுத்துகின்ற வேலையினை அமைச்சர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக விழுப்புரத்தில் கொண்டு வந்த பல்கலைக்கழகத்தை மூடிவிட்டனர். கூனிமேட்டில் 1500 கோடி ரூபாய் செலவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்தார். அதையும் திமுக அரசு ரத்து செய்தது. இப்படி காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் திமுக அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும்' என சிவி.சண்முகம் பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
Case Against Trump's Order: ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
TN Rain Alert: நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
ABP Premium

வீடியோ

தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
Case Against Trump's Order: ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
TN Rain Alert: நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
Hyundai New Cars 2026: வெர்னா டூ பேயோன்.. எஸ்யுவி தொடங்கி ஈவி வரை.. 2026ல் ஹுண்டாயின் கார் சம்பவங்கள்
Hyundai New Cars 2026: வெர்னா டூ பேயோன்.. எஸ்யுவி தொடங்கி ஈவி வரை.. 2026ல் ஹுண்டாயின் கார் சம்பவங்கள்
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Embed widget