மேலும் அறிய

ரத்தான மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி ; காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்ற முன்னாள் நாம் தமிழர் நிர்வாகி

இன்று மாலை 5 மணிக்கு கோயம்புத்தூரில் முக்கியமான நபர்கள் பாஜகவில் இணைய உள்ளதாகவும், தேதி, நேரம், இடத்துடன் கூறுகிறேன் எனவும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று மாலை 5 மணிக்கு கோயம்புத்தூரில் முக்கியமான நபர்கள் பாஜகவில் இணைய உள்ளதாகவும், தேதி, நேரம், இடத்துடன் கூறுகிறேன் எனவும் தெரிவித்து இருந்தார். இதனால் அதிமுகவை சேர்ந்த முக்கியமான நபர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் பாஜகவில் இணையலாம் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் இன்று கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இணைப்பு விழா நிகழ்ச்சி மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என பாஜகவினர் தெரிவித்து இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சென்ற பத்திரிகையாளர்கள் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த நிலையில், முக்கிய நபர்கள் யாரும் வரவில்லை. இங்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வராத நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

ரத்தான மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி ; காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்ற முன்னாள் நாம் தமிழர் நிர்வாகி

அப்போது பாஜகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி பிரதமரின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களினால் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தார். இதையடுத்து பேசிய எல்.முருகன், “பிரதமர் நரேந்திர மோடி நாளைய தினம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தர உள்ளார். என் மண் என் மக்கள் யாத்திரை 234 தொகுதிகளிலும் மக்களின் பேராதரவோடு நடந்தது. பிரதமர் மோடியின் 10 ஆண்டு சாதனையை எடுத்து செல்லும் வகையிலும், திமுக அரசின் தோல்விகளை எடுத்து செல்லும் வகையிலும் இந்த யாத்திரையாக இருந்தது. எந்த அரசியல் கட்சியும் நடத்திடாத வகையில் மிக பிரமாண்டமாக நிகழ்ச்சி நடைபெறும்.

பிரதமர் மோடியின் இரண்டு நாள் பயணம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பாஜக ஆட்சியில் 11 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கும் மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்க உள்ளோம். பிரதமர் மோடி வருகை செய்தி மக்களிடம் சேர வேண்டும். மாற்று கட்சியினர் இணைப்பு விழா நிகழ்ச்சி தள்ளி போய் உள்ளது.

தமிழ்நாடு வேகமாக வளர காரணம் மோடியின் தனிப்பட்ட அக்கறையே காரணம். பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட காரணங்களால் இணைப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சியில் இருந்தும் பாஜகவிற்கு வர உள்ளார்கள். மாற்று கட்சியினர் மோடியின் ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்து அவர்களாக வருகிறார்கள்” எனத் தெரிவித்தார். அப்போது இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு கோபத்தோடு, எல்.முருகன் செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்தார்.

ரத்தான மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி ; காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்ற முன்னாள் நாம் தமிழர் நிர்வாகி

பாஜகவின் இணைப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன், பல மணி நேரமாக காத்திருந்தார். திட்டமிட்டப்படி இணைப்பு விழா நிகழ்ச்சி நடைபெறாததால் ஏமாற்றத்துடன் அவர் திரும்பி சென்றார். இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட போது, “கட்சியில் இணைந்த பிறகு பேசுகிறேன். வேறு வேலையாக இங்கு வந்தேன். ஹோட்டலில் தங்கி இருந்தேன். பிறகு பேட்டி தருகிறேன். எந்த ஏமாற்றமும் இல்லை. நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியே வந்து விட்டேன். பிரதமரை சந்திக்க வாய்ப்பு கேட்டுள்ளேன். நான் வேறு கட்சியில் சேர்ந்து விட்டேன்” எனத் தெரிவித்தார். பின்னர் விடுதியில் வெளியே வந்த ராஜா அம்மையப்பன், தமிழக பா.ஜனதாவின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியிடம் பூங்கொத்து கொடுத்தார். அதற்கு அவர் “வெல்கம்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜா அம்மையப்பன், “நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ளேன். நாளை பிரதமரை சந்தித்து இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன். அவர்கள் பிரதமரை சந்திக்க வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார்கள். நான் பாஜகவில் இணையவில்லை. நான் கட்சியில் இணைய வரவில்லை” எனத் தெரிவித்தார். சிஏஏவில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லையே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, பதில் அளிக்காமல் அவர் தெறித்து ஓடினார். இதனிடையே அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ச்சுணன் பாஜகவின் இணைப்பு விழா நிகழ்ச்சி நடைபெறும் விடுதியை காரில் சுற்றி சுற்றி வந்ததால் பரபரப்பு நிலவியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
Embed widget