![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TTV Dinakaran: 2024 மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் உடன் இணைந்து போட்டி - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
2024 மக்களவைப் பொதுத் தேர்தலை ஓபிஎஸ் உடன் இணைந்து அமமுக எதிர்கொள்ளும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
![TTV Dinakaran: 2024 மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் உடன் இணைந்து போட்டி - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி 2024 Lok Shaba Election AMMK Alliance With OPS - TTV Dinakaran Says On Press Meet TTV Dinakaran: 2024 மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் உடன் இணைந்து போட்டி - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/27/c0171cb635ced1c49b7f594e6d5e0b551690474875190102_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
2024 மக்களவைப் பொதுத் தேர்தலை ஓபிஎஸ் உடன் இணைந்து அமமுக எதிர்கொள்ளும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த சந்திப்பில் அவர், அமமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்றும் தெரிவித்தார்.
திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வழிபட வந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அதற்கு அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இல்லை எனவும் அமமுகவிற்கு அழைப்பு வரவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், வரும் காலங்களில் இணைந்து செயல்பட முடிவெடுத்துதான் ஓபிஎஸ் உடன் இணைந்தோம் எனக் கூறினார்.
அதன் பின்னர், 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் உடன் இணைந்து போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு ஆமாம் என பதில் அளித்தார்.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலுக்கு அனைவரும் ஆயத்தமாகி வரும் நிலையில் தேசிய ஜனாநயக கூட்டணியிலும், இந்தியா கூட்டணியிலும் அமமுக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)