PM Modi Address LIVE: நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி..!!
PM Narendra Modi Address LIVE: நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி..!

Background
PM Narendra Modi Speech Today LIVE:
இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து 100 பாரம்பரிய சின்னங்களை தேசியக்கொடியின் மூவர்ண வண்ணத்தில் ஒளிரச் செய்ய இந்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், விஞ்ஞானிகள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், பெருந்தொற்றுக்கு எதிராக துணிந்துப் போராடிய நாட்டு மக்கள் ஆகியோரின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பாரம்பரிய நினைவு சின்னங்களை மூவர்ணத்தில் ஒளிர செய்ய மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. மேலும் சுகாதார மையங்கள் மீது மழை போல மலர்தூவவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
ஏன் விளக்கு ஏற்றினோம்-மோடி விளக்கம்
விளக்கு ஏற்றுவது, கை தட்டுவதையெல்லாம் விமர்ச்சித்தார்கள். ஆனால் அவை மருத்துவ பணியாளர்களை உற்சாகப்படுத்த உதவியது.
பண்டிகையில் முககவசம் அவசியம்
பண்டிகை காலங்களிலும் மறக்காமல் முககவசம் அணியுங்கள்- மோடி கோரிக்கை





















