(Source: ECI/ABP News/ABP Majha)
எடப்பாடி விட்டுச்செல்லும் ரூ.4 லட்சம் கோடி கடன்; .ப.சி., சாடல்
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வைத்துச் செல்லும் கடன் ரூ.4 லட்சம் கோடி அளவிற்கு இருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நாள் நெருங்க நெருங்க தேர்தல்களம் அனல்பறந்து வருகின்றது. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் வரும் ஞாயிறுவரை தொடரும். தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும் அக்கட்சிகளின் வேட்பாளர்களும் தங்களுடைய வாக்குறுதிகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில் "திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு பதவிக் காலம் முடியும் போது வைத்துவிட்டுப் போகும் கடன் ரூ 4 லட்சம் 85 ஆயிரம் கோடி" அதே போல 2020-21ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வரவுக்கும் செலவுக்கும் இடையே ரூ 65,994 கோடி பற்றாக்குறை.!" இந்த லட்சணத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, நெசவாளர் கடன் தள்ளுபடி என்று திரு எடப்பாடி பழனிச்சாமி நாளுக்கு ஒரு தள்ளுபடி அறிவிப்பை வெளியிடுகிறார்"
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்த லட்சணத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, நெசவாளர் கடன் தள்ளுபடி என்று திரு எடப்பாடி பழனிச்சாமி நாளுக்கு ஒரு தள்ளுபடி அறிவிப்பை வெளியிடுகிறார்</p>— P. Chidambaram (@PChidambaram_IN) <a href="https://twitter.com/PChidambaram_IN/status/1376369862172307457?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 29, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
"இந்தக் கடன் தள்ளுபடிகளுக்கு பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. "எனக்குப் பிறகு பிரளயம் வரட்டுமே” என்று பிரான்ஸ் நாட்டு் மன்னன் சொன்னது நினைவுக்கு வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். தள்ளுபடி செய்யும் கடன்களுக்கு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாத நிலையில் எப்படி முதல்வர் கூறும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறும் என்ற கேள்வியை காங்கிரஸ் மூத்த தலைவர் பா. சிதம்பரம் முன்வைத்துள்ளார்.