மேலும் அறிய
மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் - தமிழக அரசு உத்தரவு
மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும், பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்கவும்தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பதிவுத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ்
பதிவுத்துறை தலைவருக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் அனுப்பியுள்ள அனுமதிக் கடிதத்தில், ”சித்திரை முதல் தேதி, ஆடிப்பெருக்கு, தைப்பூசம் போன்ற மங்களகரமான நாட்களில் பத்திரவு பதிவு செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுத்துறையின் வருவாயை பெருக்கும் நோக்கில் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படவும் அரசு அனுமதி அளித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















