மேலும் அறிய
மதுரை பாலரங்காபுரத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து.. ஒருவர் உயிரிழப்பு..
மதுரையில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலிண்டர் விபத்து
மதுரை பாலரங்காபுரம் பகுதியில் உள்ள பாலரங்காபுரம் 1-வது தெருவில் அமைந்துள்ள வீட்டில், நேற்றிரவு 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 42 வயது மதிக்கத்தக்க சரவணன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், வீட்டின் அருகில் உள்ள கல்யாண மண்டபம் மற்றும் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தது.
இந்த விபத்து குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















