மேலும் அறிய

மயிலாடுதுறையில் ஒன்றிணைந்த காவலர்கள் - என்னவாக இருக்கும்....!

மயிலாடுதுறை அருகே 1989 - 1990 ஆண்டில் காவலர் பயிற்சி பெற்று தற்போது காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள அனைவரும் ஒரே இடத்தில் மீண்டும் சங்கமித்த நிகழ்வு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 1989 - 1990 ஆண்டில் திருநெல்வேலியில் காவலர் பயிற்சி பெற்று தற்போது காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள காவலர்கள் அனைவரும் ஒரே இடத்தில் மீண்டும் சங்கமித்த நிகழ்வு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்களும் வீடியோ காலில் இணைந்து நினைவலைகளை பகிர்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பழைய நண்பர்கள் சந்திப்பு 

பள்ளி கல்லூரிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்பது தொடர்ந்து நடைபெறும் ஒன்று. இவர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் ஒன்று கூடி தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்வர். மேலும் அவர்கள் பயின்ற பள்ளி கல்லூரிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளையும் செய்வர். இது வழக்கத்தில் உள்ள ஒன்று என்றாலும், அதில் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது. அதேபோன்ற சந்திப்பு ஒன்று மயிலாடுதுறையில் நடைபெற்றுள்ளது. ஆனால் இது முன்னாள் மாணவர்கள் அல்ல, யார் இவர்கள் முழுமையாக பார்ப்போம்.

Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?

மயிலாடுதுறையில் ஒன்றிணைந்த  காவலர்கள் - என்னவாக இருக்கும்....!

1989 - 1990 -ம் ஆண்டில் பயிற்சி பெற்ற காவலர்கள் 

1989 - 1990 ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பலர் தேர்வாகினர். அவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறில் காவலர் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த ஆண்டு ஒன்றாக காவலர் பயிற்சி பெற்றவர்கள் தற்போது தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர், எஸ்எஸ்ஐ உட்பட பல பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர். 

Birds Sleep: மரத்தின் மீது தூங்கும் போதும் பறவைகள் ஏன் கீழே விழுவதில்லை தெரியுமா? காரணம் இதுதான்..!

மயிலாடுதுறையில் ஒன்றிணைந்த  காவலர்கள் - என்னவாக இருக்கும்....!

மயிலாடுதுறையில் சந்தித்த நண்பர்கள் 

இவர் அனைவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றினைந்து சந்திக்க முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து திருச்சியில் இவர்களின் முதல் சங்கமம் நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் மீண்டும் இரண்டு ஆண்டுகள் கழித்து அனைவரும் ஒரே இடத்தில் சங்கமித்த இரண்டாம் நிகழ்வு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றக்கூடிய காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கத்துக்கு எதிராக கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு

மயிலாடுதுறையில் ஒன்றிணைந்த  காவலர்கள் - என்னவாக இருக்கும்....!

அனுபவங்கள் பகிர்வு 

பின்னர் ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களை சக காவலர் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும் சில காவலர்கள் பங்கேற்க முடியாத நிலையில் வீடியோ கால் மூலம் இணைந்து தங்களது நண்பர்கள் அனைவரையும் பார்த்து புன்னகை முகத்துடன் நினைவுகளை பரிமாறியது காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.‌ இறுதியாக அனைவரும் ஒன்றிணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Tamilnadu Round Up: அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு, லண்டனிலிருந்து அண்ணாமலை அட்டாக் - தமிழ்நாட்டில் இதுவரை!

மன அழுத்தத்தை குறைத்து சந்திப்பு 

மேலும் காவல் பணி மிகுந்த மன அழுத்தம் கொண்ட பணி எனவும், இதுபோன்ற சந்திப்பு, அதுவும் குடும்பத்தினருடன் இணைந்து பழைய நண்பர்களை பார்த்து அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவது தங்களின் மன அழுத்தத்தை குறைத்து மன நிறைவை தருகிறது என இந்நிகழ்வில் கலந்து கொண்ட காவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget