மேலும் அறிய

Birds Sleep: மரத்தின் மீது தூங்கும் போதும் பறவைகள் ஏன் கீழே விழுவதில்லை தெரியுமா? காரணம் இதுதான்..!

Birds Sleep: மரத்தின் மீது தூங்கும் போதும் கூட பறவைகள் ஏன் கீழே விழுவதில்லை என்பதற்கான காரணத்தை இந்த தொகுப்பில் அறியலாம்.

Birds Sleep: மரத்தின் மீது தூங்கும் போதும் கூட பறவைகள் கீழே விழாததற்கு அதன் உடல் வடிவமைப்பே காரணமாக உள்ளது.

இன்றியன்மையாத தூக்கம்:

மனிதன் உள்ளிட்ட எந்தவொரு உயிரினத்தின் வாழ்விலும் தூக்கம் மிக முக்கியமானது. ஆனால், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் தூக்க முறைகள் மற்றும் நேரம் உள்ளிட்டவை வேறுபட்டவை. அந்த வகையில் பறவைகள் மரங்களில் உறங்கும் போதும் கூட கீழே விழாதது எப்படி என்பதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கான பதிலை இந்த தொகுப்பின் மூலம் நீங்கள் அறியலாம்.

தூங்கும் முறை:

ஒருவர் ஆழ்ந்து உறங்கும் போது, ​​அவர் சுயநினைவில் இருப்பதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், பல முறை படுக்கும் அமைப்பை மாற்றும்போது, ​​தங்களை அறியாமலேயே நாம் படுக்கையில் இருந்து வெளியேறுகிறோம். சிலர் பெரிய வசதியான கட்டிலில் படுக்கும்போது கூட, உருண்டு சென்று கீழே விழுவது எல்லாம் சகஜமாக நடக்கும் விஷயமாக உள்ளது. ஆனால் பக்கவாட்டில் எந்த வசதியும் இல்லாத ஒரு கிளையின் மீது உறங்கும்போது கூட, பறவைகள் கீழே விழுவதில்லை. காரணம் அவ மரக்கிளைகள் மீது படுத்து உறங்குவதில்லை, கிளையின் மீது நின்றபடியே உறங்குகின்றன. படுத்து உறங்கினாலே உருண்டு புரள்கிறோம், நின்றபடியே தூங்கும்போது விழாதது எப்படி என உங்களுக்கு இப்போது கேள்வி எழலாம். அதற்கான பதில் கீழே வழங்கப்பட்டுள்ளது.

பறவைகள் எப்படி தூங்குகின்றன?

பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் கிடைத்த தகவலின்படி, பறவைகளின் தூக்கம் மிகக் குறைவு. பறவைகளின் தூக்கம் 10 வினாடிகள் மட்டுமே நீடிக்கும். அதாவது பறவைகள் குறுகிய கால தூக்கத்தையே மேற்கொள்ளும். இதுமட்டுமின்றி, பறவைகள் சில சமயங்களில் ஒரு கண்ணைத் திறந்து தூங்கும். உறங்கும் நேரத்தில் மூளையின் ஒரு பகுதி அதாவது இடது அரைக்கோளம் அல்லது வலது அரைக்கோளம் சுறுசுறுப்பாக இருக்கும் வகையில் தங்களது மூளையைக் கட்டுப்படுத்துகின்றன. பறவைகள் தூங்கும் போது கூட ஆபத்துகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள தாயர் நிலையில் இருக்கும். அதாவது தூங்கும் போது கூட தன்னை யாரேனும் நெருங்கினாலும், அதனை உணரும் திறனை பறவைகள் பெற்றுள்ளன.

பறவைகள் ஏன் விழுவதில்லை?

உறங்கும் போது மரக்கிளைகளில் இருந்து விழாமல் இருப்பதற்கான முதல் காரணம் அவற்றின் மூளையின் ஒரு பகுதி விழித்திருப்பதே என்பதை சொன்னோம். இரண்டாவது காரணம் பறவகளின் கால்களின் வடிவமைப்பு. எந்தப் பொருளையும் பற்றிக்கொள்ளும் திறனை இயற்கை அவற்றிற்கு வழங்கியுள்ளது. அதன்படி, தூங்குவதற்காக ஒரு மரத்தின் மீது அமர்ந்திருக்கும் போது, பறவைகளின் கால் நகங்கள் கிளைகளைப் பற்றிக் கொள்கின்றன. தூக்கத்திலிருந்து விழித்து பறவைகளே தங்களது கால்களை மீண்டும் அசைக்கும் வரை அவை அந்த பிடி அகலாது. அதாவது தூங்கும்போது பறவைகளின் கால் பிடி ஒரு வகையான பூட்டாக செயல்படுகிறது. இந்த வகை பூட்டினால், கிளி போன்ற பறவைகள் கிளையில் ஆடும் போதும் கூட அசராமல் தூங்கும் என்பதே ஆச்சரியம் நிறைந்த உண்மையாகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
Embed widget