மேலும் அறிய

மொழிப் போர் தியாகிகள் தினம் - மயிலாடுதுறை சாரங்கபாணிக்கு அஞ்சலி செலுத்த திரளும் கட்சிகள்

மொழிப் போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாணவர் சாரங்கபாணிக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

மொழிப் போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை கல்லூரி வாயில் அமைந்துள்ள மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபில் ஏராளமானோர் மலர்தூவி மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர்.

மொழிப் போர் தியாகிகள்

தமிழ்நாட்டில் மொழிப் போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, மயிலாடுதுறை சாரங்கபாணி, சிவகங்கை ராஜேந்திரன், என பலர் இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்களது உயிரை நீத்துள்ளனர். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் 1960-களில் தான் உச்சத்தை எட்டினாலும், 1930 களிலேயே எதிர்ப்பு தொடங்கிவிட்டது. 

மொழிப் போர் தியாகிகள் தினம் - மயிலாடுதுறை சாரங்கபாணிக்கு அஞ்சலி செலுத்த திரளும் கட்சிகள்

மொழிப் போராட்டத்தின் முதல் களப் பலி

அனைத்து பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக 1938 ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையிலான சென்னை மாகாண அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து பெரியார், மறைமலை அடிகளார் உள்ளிட்டோர் வழிகாட்டுதலில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற நடராசன், உடல்குன்றி சென்னை சிறையில் உயிரிழந்தார். மொழிப் போராட்டத்தின் முதல் களப் பலி அவர்தான். அதைத் தொடர்ந்து கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்துவும் சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

TVK Vs DMK: பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...

மொழிப் போர் தியாகிகள் தினம் - மயிலாடுதுறை சாரங்கபாணிக்கு அஞ்சலி செலுத்த திரளும் கட்சிகள்

காங்கிரஸ் அரசின் அறிவிப்பு 

நடராசன், தாளமுத்துவின் உயிரிழப்பை தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்ததால், இந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணை 1940 ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது. ஆனால், 1965 ல் இந்திய ஆட்சிமொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்று, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தலைமையிலான காங்கிரஸ் அரசின் அறிவிப்பால், மீண்டும் போராட்டம் உருவானது. அப்போது அண்ணா தலைமையில் தி.மு.க.வின் போராட்டம் உக்கிரமானது. இதில், தீக்குளித்தும், குண்டடிப்பட்டும் மாணவர்கள், இளைஞர்கள் பலர் உயிரைவிட்டனர்.

சாலையில் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் - ஏன் தெரியுமா?

50 ஆண்டுகளாக ஆட்சியை தொடரும் திராவிடக் கட்சிகள்

போராட்டத்தால் நெருக்கடி அதிகரிக்கவே, வேறு வழியின்றி இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரும் என்ற முடிவுக்கு காங்கிரஸ் அரசு வந்தது. இதனால் மாணவர்களின் 50 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தின் தாக்கத்தால், 1967-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு 50 ஆண்டுகளாக தொடர்ந்து திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சியமைத்து வருகிறது.

Chi Chi Chi Song: இந்தியாவே VIBE செய்யும் சீ சீ சீ பாடல்! எத்தனை வருஷத்துக்கு முன்னாடி வந்தது தெரியுமா?

மொழிப் போர் தியாகிகள் தினம் - மயிலாடுதுறை சாரங்கபாணிக்கு அஞ்சலி செலுத்த திரளும் கட்சிகள்

மயிலாடுதுறை சாரங்கபாணி

இந்நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்த மாணவர் சாரங்கபாணி 1965 -இல் கல்லூரி வளாகத்திலேயே இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்மீது தீ வைத்து கொண்டு உயிர் நீத்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில், அக்கல்லூரி வாயிலில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இன்று மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மன்னம்பந்தலில் உள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் நாம் தமிழர் கட்சியினர், மதிமுக, திருக்குறள் பேரவை, தமிழர் தேசிய முன்னணி, அமுமுக, அதிமுக, திமுக, தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் காலை முதல் தொடர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Passed Away: திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Bharathiraja Video: சூப்பர் ஹிட் படத்தில் ரஜினிகாந்துக்கு டூப் போட்ட மனோஜ் பாரதிராஜா! வைரலாகும் வீடியோ!
Manoj Bharathiraja Video: சூப்பர் ஹிட் படத்தில் ரஜினிகாந்துக்கு டூப் போட்ட மனோஜ் பாரதிராஜா! வைரலாகும் வீடியோ!
GT vs PBKS: போராடி தோற்ற குஜராத்!  ரூதர்போர்டு போராட்டம் வீண்.. பஞ்சாப் அணி முதல் வெற்றி
GT vs PBKS: போராடி தோற்ற குஜராத்! ரூதர்போர்டு போராட்டம் வீண்.. பஞ்சாப் அணி முதல் வெற்றி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Passed Away: திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Bharathiraja Video: சூப்பர் ஹிட் படத்தில் ரஜினிகாந்துக்கு டூப் போட்ட மனோஜ் பாரதிராஜா! வைரலாகும் வீடியோ!
Manoj Bharathiraja Video: சூப்பர் ஹிட் படத்தில் ரஜினிகாந்துக்கு டூப் போட்ட மனோஜ் பாரதிராஜா! வைரலாகும் வீடியோ!
GT vs PBKS: போராடி தோற்ற குஜராத்!  ரூதர்போர்டு போராட்டம் வீண்.. பஞ்சாப் அணி முதல் வெற்றி
GT vs PBKS: போராடி தோற்ற குஜராத்! ரூதர்போர்டு போராட்டம் வீண்.. பஞ்சாப் அணி முதல் வெற்றி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
Embed widget