மேலும் அறிய

மின்னல் தாக்கியவரைத் தொட்டால் நமக்கும் ஷாக் அடிக்குமா? நாகை ஆட்சியர் உடைத்த உடைக்க முடியாத உண்மை!

இடி, மின்னல் காரணமான உயிரிழப்புகளைத் தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முதலுதவி சிகிச்சைகள் குறித்து முக்கிய வழிகாட்டுதல்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் திடீரென ஏற்படும் இடி மற்றும் மின்னல் காரணமாக பொதுமக்களுக்கு உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தேவையான பாதுகாப்பு வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பில், இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களின் உயிரையும் உடமைகளையும் காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து விரிவாக விளக்கியுள்ளார்.

இடி மற்றும் மின்னல் நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்னல் மற்றும் இடி தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உடனடிப் பாதுகாப்பு

இடி சத்தம் கேட்டவுடன் வெளிப்புற செயல்பாடுகளை உடனே நிறுத்த வேண்டும். உடனடியாக ஒரு பாதுகாப்பான கட்டடம் அல்லது முழுமையாக மூடப்பட்ட வாகனத்திற்குள் செல்ல வேண்டும்.

திறந்தவெளிகளைத் தவிர்க்கவும்: வயல்கள், படகுகள், கூரைகள் மற்றும் பிற திறந்த பகுதிகளை விட்டு உடனடியாக விலகியிருக்க வேண்டும்.

சிறப்புக் கவனம்: குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாப்பான இடத்திற்கு முன்னதாகவே அழைத்துச் செல்ல வேண்டும்.

30 நிமிட விதி: இறுதி இடி முழக்கம் கேட்டதில் இருந்து 30 நிமிடங்கள் ஆகும் வரை வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தங்குமிடம் இல்லாத பட்சத்தில்: ஒருவேளை திறந்தவெளியில் மாட்டிக்கொண்டு தங்குமிடம் கிடைக்காவிட்டால், கால்களை ஒன்றாக வைத்து தரையில் குனிந்து அமர வேண்டும். பொதுமக்கள் கூட்டமாக இருந்தால், ஒருவருக்கொருவர் இடைவெளிவிட்டு தள்ளி நிற்க வேண்டும்.

வீட்டுக்குள் பாதுகாப்பு: வீட்டின் ஜன்னல், கதவு, பால்கனி மற்றும் வராண்டா அருகில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். மின் சாதனங்களின் மின் இணைப்பை (Plugs) முற்றிலும் துண்டிக்க வேண்டும்.

வாகனப் பாதுகாப்பு: வாகனத்தில் பயணம் செய்யும் போது இடி மின்னல் ஏற்பட்டால், வாகனத்தின் ஜன்னல்களை முழுமையாக மூடிவிட்டு உள்ளேயே இருக்க வேண்டும்.

முன்னேற்பாடுகள்: அதிகாரபூர்வ வானிலை எச்சரிக்கையையும், TN Alert மொபைல் செயலியையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். வீடுகளைச் சுற்றியுள்ள பலவீனமான மரங்களையும், மரக்கிளைகளையும் வெட்டி ஒழுங்குப்படுத்த வேண்டும். கால்நடைகளையும், கோழிகளையும் பாதுகாப்பான கொட்டகைகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

இடி மற்றும் மின்னல் நேரத்தில் செய்யக்கூடாதவை

மின்னல் ஆபத்து அதிகம் உள்ள நேரங்களில் பொதுமக்கள் செய்யக்கூடாத தவறுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளதாவது.

மரங்களின் அடியில் நிற்கக் கூடாது: இடி மற்றும் மின்னல் ஏற்படும் நேரங்களில் மக்கள் கூட்டமாக நிற்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, மரத்தின் அடியில் அல்லது மரத்தின் அருகில் எக்காரணம் கொண்டும் நிற்கக்கூடாது.

வெட்டவெளி ஆபத்து: வெட்டவெளியில் மல்லாந்து படுக்கவோ, கைகளால் தரையினைத் தொடவோ கூடாது.

நீர்நிலைகள்: ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் நிற்கவோ, நடக்கவோ அல்லது குளிக்கவோ கூடாது. வீட்டுக்குள்ளும் குழாய்கள், ஷவர்கள் அல்லது பிற நீர்க்குழாய் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

விலங்குகள் பாதுகாப்பு: செல்லப்பிராணிகளை வீட்டுக்குள் உலோகச் சங்கிலியால் கட்டி வைக்கக் கூடாது.

மின்சார அபாயம்: அறுந்து விழுந்த மின்கம்பிகளையும், சேதமடைந்த மின் கம்பங்களையும் தொடக்கூடாது. மின் சாதனங்களை ஈரமான கைகளால் கையாளக்கூடாது. மேலும், இடி மற்றும் மின்னல் நேரங்களில் அலைபேசி (Mobile Phones) மற்றும் தொலைக்காட்சி பெட்டிகளைப் (TV) பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

அவசர முதலுதவி மற்றும் மீட்பு நடவடிக்கை

முக்கியக் குறிப்பு: "திடீரென இடி மற்றும் மின்னல் தாக்கி பாதிக்கப்பட்டவரின் உடலில் மின்சாரம் பாய்ந்திருக்காது. எனவே, அவரைத் தொடுவது முற்றிலும் பாதுகாப்பானது" என்று மாவட்ட ஆட்சியர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக உலர்ந்த பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அவரது சுவாசம் மற்றும் நாடித்துடிப்பைச் சரிபார்க்க வேண்டும். அந்த நபர் சுவாசிக்க சிரமப்பட்டாலோ அல்லது சுவாசம் நின்றிருந்தாலோ அவருக்கு உடனடியாக அவசர முதலுதவி சிகிச்சையான சி.பி.ஆர் (CPR - Cardiopulmonary Resuscitation) வழங்கி, தாமதிக்காமல் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

நாகப்பட்டினத்தில் இல்லம் தேடி வரும் ரேஷன் பொருட்கள்: ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் விநியோகம்!
நாகப்பட்டினத்தில் இல்லம் தேடி வரும் ரேஷன் பொருட்கள்: ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் விநியோகம்!
தீப்பிழம்பை கையில் ஏந்தி வீதியுலா வந்த பூசாரி! மயிலாடுதுறை சக்தி பரவசத்தில் திளைத்த நின்ற பக்தர்கள்..!
தீப்பிழம்பை கையில் ஏந்தி வீதியுலா வந்த பூசாரி! மயிலாடுதுறை சக்தி பரவசத்தில் திளைத்த நின்ற பக்தர்கள்..!
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
Embed widget