வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
கியா நிறுவனம் இந்தியாவில் விரைவில் Kia Sorento Hybrid ஹைப்ரிட் காரை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனமாக திகழ்வது கியா. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இவர்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள கார் Kia Sorento Hybrid.
Kia Sorento Hybrid:
இந்த காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
இந்த காரில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் ஹைப்ரிட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 238 எச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 380 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இந்த கார் இன்னும் சில வாரங்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 6 கியர்கள் உள்ளது.
இந்த காரின் கேபின் வசதி மிகவும் முக்கியமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த Kia Sorento Hybrid காரில் 5, 6 மற்றும் 7 இருக்கை வேரியண்ட்களில் அறிமுகமாக உள்ளது. இந்த கார் 4 ஆயிரத்து 815 மி.மீட்டர் நீளமும், 1900 மி.மீட்டர் அகலமும், 1700 மி.மீட்டர் உயரமும் கொண்டது. இந்த காரின் சக்கரம் 2 ஆயிரத்து 815 மி.மீட்டர் கொண்டது.
விலை:
இந்த காரின் விலை ரூபாய் 28 லட்சம் முதல் ரூபாய் 35 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹைப்ரிட் காராக அறிமுகமாக உள்ள இந்த Kia Sorento Hybrid காரின் 1598 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆட்டோமெட்டிக் வேரியண்டாக அறிமுகமாக உள்ளது.
இந்த காரில் 19 இன்ச் டூயல் டோன் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேற்கூரை வசதி உள்ளது. 12.3 இன்ச் டிஸ்ப்ளே வசதி உள்ளது. ஆம்பியன்ட் வசதியும் உள்ளது. இந்த காரில் பனோரமிக் மேற்கூரை வசதி உள்ளது. வென்டிலேட்டட் இருக்கை ஓட்டுனருக்கும், முன் இருக்கை பயணிக்கும் உள்ளது. 360 டிகிரி வியூ கேமரா உள்ளது. வயர்லஸ் கனெக்டிவிட்டி வசதி உள்ளது. லெவல் 2 அடாஸ் வசதி உள்ளது. மொத்தம் 8 வண்ணங்களில் இந்த கார் அறிமுகமாகிறது.
எப்போது அறிமுகம்?
இந்த கார் இந்தியாவில் அறிமுகமானால் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















