மேலும் அறிய

தீப்பிழம்பை கையில் ஏந்தி வீதியுலா வந்த பூசாரி! மயிலாடுதுறை சக்தி பரவசத்தில் திளைத்த நின்ற பக்தர்கள்..!

மயிலாடுதுறை கூறைநாடு ஸ்ரீ கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் கோயில் நடைபெற்ற அக்னி கப்பரை திருவிழாவில் பூசாரி அக்னி கப்பரை ஏந்தி வர, வீதிதோறும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபட்டனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாட்டில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் ஆலயத்தின் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, முக்கிய நிகழ்வான அக்னி கப்பரை திருவீதியுலா மிகச் சிறப்பாகவும் பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு அருள் பெற்றனர்.

கோலாகலமாகத் தொடங்கிய திருவிழா

புகழ்பெற்ற கூறைநாடு ஸ்ரீ கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் தீமிதி மற்றும் அக்னி கப்பரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பெருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் மிகவும் கோலாகலமாகத் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்று வந்தன.

பக்தி பரவசமூட்டிய அக்னி கப்பரை ஊர்வலம்

திருவிழாவின் மிக முக்கியமான மற்றும் புனிதமான நிகழ்வான ‘அக்னி கப்பரை’ திருவிழா இரவு நடைபெற்றது. காலை முதலே ஆலயத்தில் சிறப்பு ஹோமங்களும், மகா மாரியம்மனுக்கு வாசனை திரவியங்கள், பால், தயிர், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்களும் மேற்கொள்ளப்பட்டு, வண்ண மலர்களால் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பூச்சொரிதல் மற்றும் புனித சடங்குகளுக்குப் பிறகு, ஆலய பூசாரி மோகன் தத்ரூபமாக அக்னி பிழம்பாய் மிளிரும் ‘அக்னி கப்பரையை’ தனது கைகளில் ஏந்தினார். ஆலய எல்லைக்குட்பட்ட கூறைநாடு மற்றும் அதன் சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் அக்னி கப்பரையுடன் பக்தி உத்வேகத்துடன் வீதியுலா வந்தார். பூசாரியின் பின்னே  'பராசக்தி ' கோஷங்கள் விண்ணைப் பிளக்க, பக்தர்களின் பக்தி முழக்கங்களுடன் ஊர்வலம் நகர்ந்தது.

வீதிகள் தோறும் நெகிழ்ச்சியான வரவேற்பு

அக்னி கப்பரை ஊர்வலம் வந்த வீதிகள் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தன. பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பாக தூய்மை செய்து, வண்ணக் கோலமிட்டு, மாவிலைத் தோரணங்கள் கட்டி வரவேற்றனர். அக்னி கப்பரை தங்கள் இல்லங்களின் வழியே கடந்து சென்றபோது, திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீடுகளின் வாசலில் நின்று, தட்டுகளில் தேங்காய், பழம், பூக்கள் வைத்து, தீபாராதனை எடுத்து அக்னி கப்பரையை பக்தியுடன் வணங்கினர். அம்மனின் அருள்வேண்டி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள், அக்னி கப்பரை மீது மலர்களைத் தூவி வழிபட்டு தங்கள் பக்திப் பரவசத்தை வெளிப்படுத்தினர். ஊர்வலம் சென்ற பாதையெங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பவனி வந்த மகா மாரியம்மன்

அக்னி கப்பரை வீதியுலாவைத் தொடர்ந்து, அருள்மிகு ஸ்ரீ கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் கம்பீரமான எழுந்தருளினார். வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், நகரின் முக்கிய வீதிகள் வழியாகப் பவனி வந்தது. வழியெங்கும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்களுக்கு அம்மன்  அருள்மழை பொழிந்தார்.

கண் கவர்ந்த கலை நிகழ்ச்சிகள் & வானவேடிக்கை

ஆன்மீக நிகழ்வுகளுடன் கூடவே, விழாவிற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் அமைந்திருந்தன. இளைஞர்களின் உற்சாகமான, துள்ளல் நிறைந்த கோலாட்ட நிகழ்ச்சிகள் ஊர்வலத்தின் முன்னால் நடைபெற்று அனைவரையும் கவர்ந்தன. பாரம்பரிய உடை அணிந்து இளைஞர்கள் ஆடிய கோலாட்டம் விழாவுக்குத் தனிச் சிறப்பை கூட்டியது. மேலும், இரவை பகலாக்கும் வகையில் விண்ணில் வண்ணஜாலங்கள் காட்டிய பிரம்மாண்ட வானவேடிக்கை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விதவிதமான வண்ணங்களில் வானில் வெடித்துச் சிதறிய வானவேடிக்கையைக் கண்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வியந்து மகிழ்ந்தனர்.

ஆகஸ்ட் 2-இல் சிகர நிகழ்வான தீமிதி திருவிழா

அக்னி கப்பரை திருவிழா பக்தர்களிடையே பெரும் ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தத் திருவிழாவின் சிகர நிகழ்வான "பிரசித்தி பெற்ற தீமிதி திருவிழா" வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெகு விமர்சையாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெற உள்ளது. காப்பு கட்டி விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்று அக்னி குண்டம் இறங்கி அம்மனுக்குத் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்த உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் கூறைநாடு பகுதி பொதுமக்கள் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி காவல் துறையினரும் தகுந்த ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

தீப்பிழம்பை கையில் ஏந்தி வீதியுலா வந்த பூசாரி! மயிலாடுதுறை சக்தி பரவசத்தில் திளைத்த நின்ற பக்தர்கள்..!
தீப்பிழம்பை கையில் ஏந்தி வீதியுலா வந்த பூசாரி! மயிலாடுதுறை சக்தி பரவசத்தில் திளைத்த நின்ற பக்தர்கள்..!
தங்க கவசம், வைரவேல் தரிசன மகிமை! சுவாமிமலை முருகனின் அற்புத ரகசியங்கள்!
தங்க கவசம், வைரவேல் தரிசன மகிமை! சுவாமிமலை முருகனின் அற்புத ரகசியங்கள்!
எல்நினோ வெப்பத்திலிருந்து காக்க சிறப்பு வழிபாடு: மயிலாடுதுறையில் 108 விளக்கேற்றிப் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனை!
எல்நினோ வெப்பத்திலிருந்து காக்க சிறப்பு வழிபாடு: மயிலாடுதுறையில் 108 விளக்கேற்றிப் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனை!
பங்குனி முயக்கம்? தமிழர் பாரம்பரியத்தின் அரிய ஆன்மிக விழா: தெரிந்து கொள்ளுங்கள்
பங்குனி முயக்கம்? தமிழர் பாரம்பரியத்தின் அரிய ஆன்மிக விழா: தெரிந்து கொள்ளுங்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Maruti Suzuki Victoris on EMI: நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸ் வாங்க ஆசையா.? அதுக்கு மாசம் EMI எவ்ளோ தெரியுமா.?
நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸ் வாங்க ஆசையா.? அதுக்கு மாசம் EMI எவ்ளோ தெரியுமா.?
Embed widget