மீன்பிடி துறைமுகத்தில் தீடிரென பற்றி எரிந்த விசைப்படகு - என்ன நடந்தது?
சீர்காழி அருகே பழையார் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகில் சிலிண்டர் வெடித்ததில் படகு முழுவதும் எரிந்து தீயிக்கு இரையாகியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையார் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகில் சிலிண்டர் வெடித்ததில் படகு முழுவதும் எரிந்து தீயிக்கு இரையாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழையார் மீன்பிடி துறைமுகம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது பழையார் மீனவர் கிராமம். இக்கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசை படகுகளும், ஆயிரக்கணக்கான பைபர் படகுகளை பயன்படுத்தி அப்பகுதி மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பழையாரை சேர்ந்த பக்கிரிசாமி என்பவரது மகன் 50 வயதான கோவிந்தன் என்பவரது விசைபடகு பழையார் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
“எனக்கு ரொம்ப வருத்தம்; மய்யத்தில் நான் காம்சோர்” – கமல் கட்சியில் விலகும் முக்கிய நடிகை!
தீ பற்றிய விசைப்படகு
விசைப்படைகில் கொள்ளிடம் அருகே காட்டூர் கன்னிக்கோயில் தெருவை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் 55 வயதான கலியபெருமாள் என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கலியபெருமாள் சமைத்து சாப்பிடுவதற்காக விசை படகில் உள்ள கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் தீ பற்றி வெடித்து எரிய தொடங்கியுள்ளது. இதில் தீ மள மளவென அதிக அளவில் பரவி விசைப்படகு முழுவதும் கடுமையாக தீ பற்றி எரிந்ததுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இதனை கண்ட சக மீனவர்கள் சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்துவிட்டு அவர்களாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து சம்ப இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த படகின் தீயை அணைத்தனர். இதில் படகில் இருந்த கலியபெருமாளுக்கு கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டதை அடுத்து அவரை மீட்ட மீனவர்கள் அவரை சீர்காழி அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து புதுப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயில் எரிந்த விசைபடகின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் ஆகும்.
விஜய்யுடன் இணையும் ஆதவ் அர்ஜுனா? திருமா கொடுத்த உடனடி ரியாக்ஷன்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

