மேலும் அறிய

Rain Update: புயல், மழையை எதிர்கொள்ள இதுதான் பிளான் - அமைச்சர் சொன்ன அப்டேட்ஸ்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் 201 இடங்கள் பாதிக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அரசு அருங்காட்சியகம் இயக்குநர் கவிதா ராமு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி, பும்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைத்துதுறை சார்ந்த கூட்டம் 

இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சார வாரியம், சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களிடம் அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

Rain Update: புயல், மழையை எதிர்கொள்ள இதுதான் பிளான் - அமைச்சர் சொன்ன அப்டேட்ஸ்

செய்தியாளர் சந்திப்பு 

அதனை தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளது. 11 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக நிவாரண மையங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 362, திருமண மண்டபம் 146, சமுதாய கூடங்கள் 58 ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

Rain Update: புயல், மழையை எதிர்கொள்ள இதுதான் பிளான் - அமைச்சர் சொன்ன அப்டேட்ஸ்

பாதிக்கப்படக்கூடிய பகுதிகள்

புயல் மற்றும் மழை தொடர்பான எச்சரிக்கைகளை அளித்திட 25 கடற்கரை கிராமங்களில் எச்சரிக்கை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் அதிகமாக பாதிக்கக்கூடிய இடங்களாக 12 பகுதிகள், அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் 33 குறைந்த அளவு பாதிக்கக்கூடிய பகுதிகள் என மொத்தம் 201 பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

4500 முதல்நிலை பொறுப்பாளர்கள் 

4500-க்கும் அதிகமான முதல்நிலை பொறுப்பாளர்கள் அனைத்து வட்டங்களிலும் பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளார்கள். புயல் மற்றும் மழை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை உடனடியாக அகற்றி, இயல்பு நிலை ஏற்படுத்திட ஏதுவாக அனைத்து துறைகளிலும் ஜெசிபி 85, ஜெனரேட்டர்கள் 164, பவர் சா 57, ஹிட்டாச்சி 31, மணல் மூட்டைகள் 40,351, மரம் அறுக்கும் கருவிகள் 84, சவுக்கு கம்பங்கள் 34,110 பிளிச்சிங் பவுடர் 5,870 கிலோ ஆகியவன போதிய அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Rain Update: புயல், மழையை எதிர்கொள்ள இதுதான் பிளான் - அமைச்சர் சொன்ன அப்டேட்ஸ்

துணை ஆட்சியர்கள் தலைமையில் குழு

வட்ட அளவிலான முன்னெச்சரிக்கை மற்றும் இடம் பெயர்தல் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு, தங்குமிடம் மற்றும் பாரமரிப்புக்குழு ஆகிய குழுக்கள் ஒவ்வொரு வட்டத்திற்கும் 10 அனைத்துத்துறை அலுவலர்களைக்கொண்ட தனித்தனியான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 வட்டத்திற்கும் துணை ஆட்சியர்கள் தலைமையில் ஒரு வட்டத்திற்கு 3 குழுக்கள் வீதம் மொத்தம் 12 தனித்தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் உள்ளார்கள். 

Rain Update: புயல், மழையை எதிர்கொள்ள இதுதான் பிளான் - அமைச்சர் சொன்ன அப்டேட்ஸ்

மின்சாரம் சார்ந்த ஏற்பாடுகள் 

தாழ்வான மின்கம்பங்கள் இழுத்து கட்டப்பட்டுள்ளது. மின் பாதையில் இடையூராக இருந்த மரங்கள் மற்றும் கிளைகள் 2,320 அகற்றப்பட்டுள்ளது. 5,600 மின்கம்பங்கள் இருப்பு உள்ளது. மின்மாற்றிகள் 44 மற்றும் 52 கி.மீ மின் கம்பிகளும் அவசர காலத்திற்கு பயன்படுத்திட கை இருப்பில் உள்ளது. 

மருத்துவம் 

வெள்ளம் மற்றும் மழையின் போது நாய் கடி மற்றும் பாம்பு கடித்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டிடி தடுப்பூசி, ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி மற்றும் பாம்பு விஷம் எதிர்ப்பு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 

தொடர்பு எண்கள் 

மயிலாடுதுறை மாவட்டம் வடகிழக்கு பருவமழை 2024- ஆம் ஆண்டு மழை புயல் வெள்ளம் இடி மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகள் தொடர்பான அனைத்து புகார்களையும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்- 04364-222588 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்- 04364-1077 என்ற எண்களுக்கு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். மேலும் காவல்துறை கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொள்ள -9442626792 என்ற எண்ணிலும், மின்சாரத்துறை கட்டுப்பாட்டு அறையினை பொருத்தவரை மயிலாடுதுறை கோட்டத்திற்கு -04364-252218, 9498482319 என்ற எண்ணிலும், சீர்காழி கோட்டத்திற்கு - 04364-279301, 9445854006 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டு அறையினை பொருத்தவரை மயிலாடுதுறை கோட்டத்திற்கு - 04364222277, 8668171501 என்ற எண்ணிலும், சீர்காழி கோட்டத்திற்கு -04364-276336, 9842382883 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என அப்போது அவர் தெரிவித்தார்.

Rain Update: புயல், மழையை எதிர்கொள்ள இதுதான் பிளான் - அமைச்சர் சொன்ன அப்டேட்ஸ்

முதலமைச்சரின் பொது நிவாரண நிதி

தொடர்ந்து கடந்த 24.08.2024 அன்று திருவாலங்காடு வெடி தயாரிக்கும் இடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த குமார் என்பவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின்கீழ் ரூ.3 லட்சத்திற்கான காசோலையையும், படுகாயமடைந்த கலியபெருமாள் என்பவருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் அமைச்சர் வழங்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
Embed widget