மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (09.06.2026) :உங்க ஊர் இதுல இருக்கா? ஜூன் 9-ல் 8 மணி நேரம் கரண்ட் கட் - லிஸ்ட்டை வெளியிட்ட மின் வாரியம்!

Mayiladuthurai Power Shutdown 09.06.2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட நீடூர் துணைமின் நிலையத்தில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) அன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அன்று ஒரு நாள் மட்டும் நீடூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மயிலாடுதுறை நகர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு உதவி செயற் பொறியாளர் பொறியாளர் M. விஜயபாரதி B.E., தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;

பராமரிப்பு பணியின் நோக்கம்

தமிழ்நாடு மின் வாரியத்தின் விதிகளின்படி, மின் நுகர்வோருக்கு தடையற்ற மற்றும் சீரான மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மாதந்தோறும் துணைமின் நிலையங்களில் உயர் அழுத்த மின் பாதைகள், மின் மாற்றிகள் (Transformers) மற்றும் மின் கம்பிகளில் உள்ள பழுதுகளை நீக்கும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள முக்கிய துணைமின் நிலையங்களில் ஒன்றான நீடூர் துணைமின் நிலையத்தில் நாளைய தினம் 09.06.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று அவசியமான மாதாந்திர பராமரிப்பு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் (காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை) இந்த பராமரிப்பு பணிகள் தடையின்றி மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புடன் நடைபெறுவதற்காக, இத்துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறக்கூடிய பின்வரும் முக்கிய ஊர்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து கிராமப் பகுதிகளிலும் அன்றைய தினம் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் பாதிப்புக்குள்ளாகும் முக்கிய பகுதிகள்

 * நீடூர்

 * மல்லியக்கொல்லை

 * வில்லியநல்லூர்

 * கொண்டல்

 * பாலாக்குடி

 * தாழஞ்சேரி

 * கொற்கை

 * அருண்மொழிதேவன்

 * கங்கணம்புத்தூர்

 * மேலாநல்லூர்

 * நடராஜபுரம்

 * கீழமருதாந்தநல்லூர்

 * மேலமருதாந்தநல்லூர்

 * பொன்மாசநல்லூர்

 * மாப்படுகை

 * ஆனந்தக்குடி

 * சோழப்பேட்டை

 * மணலூர்

மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளைச் சுற்றியுள்ள அனைத்து கிராமப்புறப் பகுதிகளுக்கும் அன்றைய தினம் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் கூறப்பட்டுள்ளது.

மின் வாரியத்தின் வேண்டுகோள் மற்றும் முன்னெச்சரிக்கை

மின்சார வாரிய ஊழியர்கள் இப்பராமரிப்பு பணிகளைச் செவ்வனே செய்து முடிக்க ஏதுவாக, குறிப்பிட்ட நேரத்தில் மின்வாரியத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் கவனத்திற்கு

அன்றைய தினம் மின்சாரம் தடைபட உள்ளதால், இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு குறு தொழிலகங்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை (நீர் சேமிப்பு, மின் சாதனங்களை சார்ஜ் செய்தல் போன்றவை) முன்கூட்டியே திட்டமிட்டுத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பணிகள் நிறைவு: பராமரிப்பு பணிகள் திட்டமிட்டபடி மாலை 5:00 மணிக்குள் முடிக்கப்பட்டு, அதன்பின் உடனடியாக மின் விநியோகம் வழக்கம்போல் சீராக வழங்கப்படும் என்றும், பணிகள் முன்கூட்டியே நிறைவடைந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayiladuthurai Power Shutdown (09.06.2026) :உங்க ஊர் இதுல இருக்கா? ஜூன் 9-ல் 8 மணி நேரம் கரண்ட் கட் - லிஸ்ட்டை வெளியிட்ட மின் வாரியம்!
Mayiladuthurai Power Shutdown (09.06.2026) :உங்க ஊர் இதுல இருக்கா? ஜூன் 9-ல் 8 மணி நேரம் கரண்ட் கட் - லிஸ்ட்டை வெளியிட்ட மின் வாரியம்!
கடலுக்குள் மீன் வடிவில் மறைந்திருந்த சூரன்; அலைகடலில் வதம் செய்த முருகன்! தரங்கம்பாடியில் நடந்த ஆன்மிக அதிசயம்!
கடலுக்குள் மீன் வடிவில் மறைந்திருந்த சூரன்; அலைகடலில் வதம் செய்த முருகன்! தரங்கம்பாடியில் நடந்த ஆன்மிக அதிசயம்!
"ஐந்தாயிரம் ரூபாய் தள்ளுபடி விவசாயிகளை கேலி செய்வதா?" - மயிலாடுதுறையில் தவெக அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்!
தங்கக் கொரடு, ஆபரணங்கள் பூண்டு வீதி உலா வந்த குருமகா சன்னிதானம்: பூரணகும்ப மரியாதையுடன் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்..
தங்கக் கொரடு, ஆபரணங்கள் பூண்டு வீதி உலா வந்த குருமகா சன்னிதானம்: பூரணகும்ப மரியாதையுடன் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
C. Vijayabasker : 'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
மாஸ்.. கிளாஸ்.. பாஸ்..! கெத்து காட்டும் Yezdi Scramble பைக் - விலை, மைலேஜ் எப்படி?
மாஸ்.. கிளாஸ்.. பாஸ்..! கெத்து காட்டும் Yezdi Scramble பைக் - விலை, மைலேஜ் எப்படி?
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Embed widget