மேலும் அறிய

Power Shutdown: மயிலாடுதுறையில் நாளை மின் நிறுத்தம் - எங்கன்னு தெரியனுமா? விபரம் உள்ளே....!

Mayiladuthurai Power Shutdown 07.01.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (07.01.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

மயிலாடுதுறை மின் கோட்ட மின்வாரிய செய்தி குறிப்பு 

தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட உதவி செயற் பொறியாளர் கலியபெருமாள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மயிலாடுதுறை துணைமின் நிலையத்தில் நாளை 07.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் வடகரை, அரங்ககுடி அன்னவாசல், இளையாளூர்,குளிச்சார், செறுதியூர், கழனிவாசல் மற்றும் நீடூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் கங்கணம்புத்தூர், கொற்கை, தாழஞ்சேரி, வரகடை அகிய பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணல்மேடு துணை மின் நிலையம் 

அதேபோன்று மணல்மேடு உதவி செயற்பொறியாளர் இளையராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளைய தினம் மணல்மேடு துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் பெறும் 33 கி.வோ திருமங்கலம் உயரழத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 33 கி.வோ திருமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் திருமங்கலம், பொன்னூர், காளி, பனையூர், செட்டிதோப்பு, கிரமேடு, ஐவநல்லூர், பாண்டூர், கட்டளைச்சேரி, கொளத்தூர், மல்லிகைசேரி, செண்பகசேரி, வடகாளி, கன்னியாநத்தம், கிடாத்தலைமேடு, பொய்யக்குடி, நமச்சிவாயபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெரம்பூர் துணை மின்நிலையம் 

அதேபோல் பெரம்பூர் துணை மின்நிலையத்திலும் நாளை தினம் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பெரம்பூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான  எடக்குடி, பாலூர், ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மயிலாடுதுறை புறநகர் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

சீர்காழி மின்வாரிய கோட்டம்

செம்பனார்கோயில் உதவி செயற்பொறியாளர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளைய தினம் கிடாரங்கொண்டான் துணைமின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வலத்தான்பட்டிணம், முடிகண்டநல்லூர், காலகஸ்தினாதபுரம், மடபுரம், உமையாள்புரம், அபிஷேககட்டளை, அப்புராசபுத்தூர், ஆக்கூர் மற்றும் ஆக்கூர் முக்கூட்டு ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி வரை மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.

திருவெண்காடு துணை மின் நிலையம் 

சீர்காழி தெற்கு உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளைய தினம் திருவெண்காடு துணைமின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான பாகசாலை, காத்திருப்பு,  அண்ணன் பெருமாள்கோவில், திருக்காட்டுப்பள்ளி, தொக்களாக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என  தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN AssemblyEPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Embed widget