Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown 26.02.2025 : மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (26.02.2025) மின் பாதையில் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பாதை பணிகள்
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
Dharmapuri Jobs: நர்சிங் தேர்ச்சி பெற்றவரா? சமூக நலத் துறையில் வேலை - விவரம் இதோ!
மின்நிறுத்த நேரம்
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியில் இருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" ஒரே போடு போட்ட சி.வி. சண்முகம்!
ஆச்சாள்புரம் துணை மின்நிலையம்
அந்த வகையில் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட ஆச்சாள்புரம் துணைமின் நிலையம் 33/11KV இருந்து 110/33-11KV யாக தரம் உயர்த்தும் பணிகள் மற்றும் புதிய 110KV ஆச்சாள்புரம் துணை மின்நிலைய இருவழி மின்தடம் மின்னூட்டம் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று 26-02-2025 புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை மேற்படி துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் சீர்காழி வடக்கு மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hyperloop Train: அதிவேக ஹைப்பர்லூப் ரயில்! டெஸ்ட் ட்ராக் தயார் - சோதனை ஓட்டம் எப்போது?
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
ஆச்சாள்புரம், மாங்கனாம்பட்டு, கொள்ளிடம், ஆணைகாரன்சத்திரம், மகேந்திரப்பள்ளி, பழையார், புதுப்பட்டிணம், மாதானம், பழையபாளையம், பச்சைபெருமாநல்லூர், சீயாளம், தாண்டனவன்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்
மாறுதலுக்கு உட்பட்டது
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Before You Go
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























