மேலும் அறிய

Hyperloop Train: அதிவேக ஹைப்பர்லூப் ரயில்! டெஸ்ட் ட்ராக் தயார் - சோதனை ஓட்டம் எப்போது?

Hyperloop Train: ஹைப்பர்லூப் ரயில் சேவைக்கான டெஸ்ட் ட்ராக் தயாராகிவிட்டது.

நாட்டின் ரயில் போக்குவரத்து துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படும் ஹைப்பர்லூப் ரயில் சேவைக்கான டெஸ்ட் ட்ராக் (hyperloop test track) தயாராகிவிட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா எடுத்துவரும் முயற்சி அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்நோக்கியே இருக்கும். போக்குவரத்து துறையிம் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், மத்திய ரயிலே துறையின் நிதியுதவியின் கீழ் ஐ.ஐ.டி. மெட்ராஸில் புதிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, மெட்ரோ, புல்லட் ரயில்களை விட அதிக வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் ரயில்கள் விரைவில் அறிமுகம் செய்ய அது தொடர்பான ஆய்வுகள், தயாரிப்புகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதிய காணொலி ஒன்றை அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஹைப்பர்லூப் டெஸ்ட் ட்ராக்கின் சோதனை ஓட்டம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. 

ஹைப்பர்லூப் ரயில் சேவை (Hyperloop test track):

'Hyperloop Track' என்பது ஐந்தாவது மோட் ஆஃப் ட்ரான்ஸ்போர்ட் என்று சொல்லப்படுகிறது. அதிவேகமாக பயணிக்க கூடிய ரயில்கள்; அதிவேக ரயில் சேவை. சிறப்பு கேப்ஸ்யூல்ஸ் கொண்டு உருவாக்கப்படும் ரயில் நீண்ட தூர பயணங்களுக்கு பெரிதும் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹைப்பர்லூப் - மணிக்கு 1100 கிமீ வேகம்:

சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரஸ், மெட்ரோ, புல்லட் என ரயில் சேவையின் வளர்ச்சி தொடர்ந்து வருகிறது. 
புல்லட் ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 (300) கிலோ மீட்டர் என்பது. இந்நிலையில்,  ஹைப்பர்லூப் ரயிலின் வேகம் மணிக்கு 1,100 கிலோ மீட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவின் போக்குவரத்து  சேவையின் பண்பை முற்றிலும் மாற்றிவிடும் அளவுக்கு புதிய புரட்சியை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாக உருவாகியிருக்கிறது ஹைப்பர்லூப் ரயில் சேவை. இந்தத் திட்டத்தின் முயற்சியாக அமைக்கப்பட்டிருக்கும் வழித்தடம் தயாராக உள்ளதென மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரயில்களில் ஜன்னல்கள் மூடியபடி இருக்கும். காற்று ரயிலுக்கு உள்ளே வருவதை தடுப்பதன் மூலம், அதி வேகமாக பயணம் செய்ய முடியும். அதன்படி, vacuum ட்யூப்களில் சிறப்பு ’capsules' மூலம் ஹைப்பர்லூப் ரயில் சேவை உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ஐ.ஐ.டி. சென்னையில்...

சென்னை -ஐஐடி வளாகத்துக்குள், ஒரு மில்லியன் டாலர் நிதியுடன் குழுவினர் உருவாக்கியிருக்கும் 410 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர்லூப் பாதையில், சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.  இந்த முயற்சிக்கு, இந்திய ரயில்வேயின் நிதியுதவி சென்னை ஐ.ஐ.டி.-க்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஹைப்பர்லூப் ரயில் சேவையில், ஒரு வெற்றிடக் குழாய் ரயில் பாதையாக இருக்கும். அதற்குள் அதிவேகத்தில் ரயில் பயணிக்கும். இதில் காற்று பயண வேகத்தை குறைக்கும் வாய்ப்பும் குறைவு. இதனால், மிக வேகமாக மற்றும் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.   டெல்லி - ஜெய்பூர், டெல்லி - மும்பை, சென்னை - பெங்களூரு, சென்னை - திருச்சி செல்ல வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் கூட ஆகாதாம். வெறும் 30 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்கின்றனர். இது தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது 410 மீட்டருக்கு டெஸ்ட் ட்ராக் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை வெற்றி பெற்றவுடன், இந்த திட்டத்தை செயல்படுத்தும் முயற்சிகள் தொடங்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஹைப்பர்லூப் ரயில் சேவை வந்துவிட்டால் தொலைவில் உள்ள இடங்களில் 30 நிமிடங்களில் செல்ல முடியும் என்கிறார்கள்.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Embed widget