மேலும் அறிய

திமுக ஆட்சியில் நடைபெற்ற 2000-ம் ஆவது கோயில் கும்பாபிஷேகம் - எந்த கோயில் தெரியுமா?

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் 2000 -ம் ஆவது கோயில் குடமுழுக்காக பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் 2000 -ம் ஆவது கோயில் குடமுழுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அடுத்த திருப்பறியலூர் என்று அழைக்கப்படும் பரசலூர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமையான, தேவாரம் பாடல் பெற்ற அட்டவீரட்ட தலங்களில் 4-வது தலமான இளங்கொம்பனையாள் சமேத வீரட்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 

திமுக ஆட்சியில் நடைபெற்ற 2000-ம் ஆவது கோயில் கும்பாபிஷேகம் - எந்த கோயில் தெரியுமா?

கோயில் வரலாறு 

முன்னொரு காலத்தில் செய்நன்றி மறந்த மாமன் முறை கொண்ட தட்சனை, வீரபத்திரரை கொண்டு தட்சனின் தலையை கொய்து, சுவாமி வதம் செய்த தலமாகவும், பின்னர் தட்சனின் மனைவி வேதவல்லி வேண்டுதலை ஏற்று ஆட்டின் தலையை பொருத்தி, தட்சனை சிவபெருமான் உயிர்ப்பித்த தலமாகவும் விளங்குவதால் சுவாமிக்கு வீரட்டேஸ்வரர் என்ற பெயர் வழங்கப்பட்டது. கோயிலின் வரலாறு குறித்து தக்கயாக பரணி என்ற நூலில் ஒட்டக்கூத்தர் விவரமாக குறிப்பிட்டுள்ளார். இக்கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்பவர்களுக்கு விவாகத்தடை மற்றும் மாங்கல்ய தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். 

திமுக ஆட்சியில் நடைபெற்ற 2000-ம் ஆவது கோயில் கும்பாபிஷேகம் - எந்த கோயில் தெரியுமா?

பாலாலயம் 

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேகமானது கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் மகா கும்பாபிஷேகம் விழா செய்ய தருமபுரம் ஆதீனம் மற்றும் அவ்வூர் பக்தர்கள் முடிவெடுத்து அதற்காக திருப்பணிகளை கடந்த ஆண்டு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் செய்து பாலாலயம் பூஜைகள் செய்து பணிகளை தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். 

திமுக ஆட்சியில் நடைபெற்ற 2000-ம் ஆவது கோயில் கும்பாபிஷேகம் - எந்த கோயில் தெரியுமா?

அதனைத் தொடர்ந்து கோயிலில் புதிய காட்டிட வேலைகள், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் கடந்த ஒர் ஆண்டாக நடைபெற்று நிறைவுற்றது. அதனை அடுத்து கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான நாள் குறிக்கப்பட்டு, கும்பாபிஷேக தினமான இன்று கோயில் மகா கும்பாபிஷேகம் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. 

திமுக ஆட்சியில் நடைபெற்ற 2000-ம் ஆவது கோயில் கும்பாபிஷேகம் - எந்த கோயில் தெரியுமா?

பூர்வாங்க பூஜைகள் 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 25 -ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், கடந்த 27-ம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகளும் தொடங்கின. தொடர்ந்து இன்று ஆறாம் கால யாகசாலை பூஜை முடிவடைந்து, பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை அடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து சிவாசாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க கோயில் சுற்றி வலம் வந்து கோயில் கோபுர கலசத்தை அடைத்தனர்.

திமுக ஆட்சியில் நடைபெற்ற 2000-ம் ஆவது கோயில் கும்பாபிஷேகம் - எந்த கோயில் தெரியுமா?

அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் ஓத, மங்கல வாத்தியங்கள் இசைக்க தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கும்ப கலசத்தில் புனித நீரூற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு ஆதீன மடாதிபதிகள், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, தருமபுரம் ஆதீன தம்பிரான்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திமுக ஆட்சியில் நடைபெற்ற 2000-ம் ஆவது கோயில் கும்பாபிஷேகம் - எந்த கோயில் தெரியுமா?

திமுக ஆட்சியில் 2000 வது கும்பாபிஷேகம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், தொன்மையான திருக்கோயில்களைப் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2,000 -வது குடமுழுக்காக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பரசலூர் அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget