டாஸ்மாக்கில் காலாவதியான பீர்... குடித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி
டாஸ்மாக் மதுபான கடையில் பீர் அருந்திய இருவர் வாந்தி மயக்கம்.
சீர்காழி அருகே டாஸ்மாக்கில் காலாவதியான பீர் வாங்கி குடித்த இளைஞர் இருவர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு டாஸ்மாக்
கள்ளச்சாராயங்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகளை தடுப்பது, மேலும் அரசுக்கு வருமானம் எட்டு வகையில் அரசு சார்பில் டாஸ்மாக் என்ற பெயரில் அரசு மதுபான கடைகள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு கொண்டு வருகிறது. குறிப்பாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்கள் மாற்றாக இந்த மதுபானம் இருக்கும் என பொதுவான கருத்து இருந்து வருகிறது. ஆனால் அதனை கேள்விக்குறியாக்கும் விதமாக சீர்காழியில் ஒரு சம்பவம் நடந்தேறி உள்ளது. அரசு மதுபான கடையில் காலாவதியான மதுபான விற்பனை நடைபெற்ற சம்பவம் மதுபான பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TN Weather: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை குறையும் - மிதமான மழைக்கு வாய்ப்பு!
காலாவதியான மதுபானம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா காரைமேடு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் 31 வயதான மணிகண்டன். நாங்கூர் மேலத் தெருவை சேர்ந்த 27 வயதான சார்லஸ் நண்பர்களான இவர்கள் இருவரும் தென்னலக்குடியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் நேற்று மாலை டின் பீர்களை வாங்கி அருந்தியுள்ளனர். பீர் குடித்த அடுத்த சில மணி நேரத்தில் இருவருக்கும் வாந்தி, மயக்கம் மற்றும் பேதி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் இருந்த அவரது நண்பர் அளக்குடி பிரகாஷ் என்பவர் மற்ற நண்பர்கள் உதவியுடன் இருவரையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
Aranmanai 4: வசூல் வேட்டையாடும் அரண்மனை 4! 2024ல் கலெக்ஷனை அள்ளிய டாப் 5 தமிழ் படங்கள்!
காவல்துறையினர் விசாரணை
அங்கு மணிகண்டன் மற்றும் சார்லஸ் ஆகிய இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார். அவர்களின் முதற்கட்ட விசாரணையில் அரசு டாஸ்மாக் கடையில் வாங்கிய டின் பீர் கடந்த ஜனவரி மாதம் 23 -ஆம் தேதியுடன் காலாவதி ஆனது என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அரசு டாஸ்மாக் மதுபான கடையில் பீர் அருந்திய இருவர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டுள்ள சம்பவம் மதுபான பிரியர்களுக்கு இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.