ரயிலில் பெண்ணிடம் தவறாக நடந்த நபர்; துணிச்சலாக கையாண்ட இளம்பெண் - அதிர்ச்சி வீடியோ
உதவி ஆய்வாளர் அவசர சங்கிலியை இழுத்து நெய்வேலி ரயில்வே நிலையத்தில் செல்வராஜை ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
ரயிலில் குடிபோதையில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபரை பிடித்து ரயில்வே நிலைய காவல் நிலையத்தில் இளம்பெண் ஒப்படைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து பெங்களூர் வரை பெங்களூரு எக்ஸ்பிரஸ் தினமும் அதிககாலை 4.30 மணிக்கு புறப்பட்டு பெங்களூர் செல்கிறது. இந்த ரயிலில் முன்பதிவு இல்லாததால் பதிவு செய்யாத பயணிகள் அதிகம் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை காரைக்காலைச் சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் யோக தர்ஷினி தனது பட்டிமன்ற பணிக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
Crime: தஞ்சையில் 19 வயது இளம்பெண் பலி - போதையில் தலையில் கல்லை போட்டு கொன்ற காதலன்
அப்போது கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடலூரில் ரயில் ஏறிய நபர் ஒருவர் இந்த பெண்ணின் இருக்கைக்கு எதிரே அமர்ந்து உள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த நபர் பட்டிமன்ற பேச்சாளர் யோக தர்ஷினியிடம் தவறான முறையில் நடந்து கொண்டு செய்கைகளை காண்பித்துள்ளார். இதனால் அச்சமடைந்த பட்டிமன்ற பேச்சாளர் யோக தர்ஷினி உதவிக்காக அதே ரயில் பெட்டியில் பின் இருக்கையில் இருந்தவரிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது அந்த நபர் நான் மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சுவாமிநாதன் உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டுள்ளார்.
ரயில் பெண் முன் தவறாக நடந்துகொண்ட நபர்- காவல் துறையிடம் ஒப்படைத்த வீரமங்கை...! pic.twitter.com/S27juvp74A
— JAGANNATHAN (@Jaganathan_JPM) February 22, 2024">
அதனை அடுத்து நடந்ததை கூறிய யோக தர்ஷினி இருவரும் சேர்ந்து அந்த ஒழுங்கினமான செயலில் ஈடுபட்ட நபரிடம் விசாரித்துள்ளனர். அவர் அதிக அளவில் குடிபோதையில் இருந்ததால் அவர் பேசுவது புரியாத நிலையில், பெயர் மட்டும் செல்வராஜ் என்று கூறி உள்ளார். இதனை அடுத்து உதவி ஆய்வாளர் அவசர சங்கிலியை இழுத்து நெய்வேலி ரயில்வே நிலையத்தில் செல்வராஜை ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவங்களை யோக தர்ஷினி தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.
Crime: திருமணத்தை மீறிய உறவு.. மனைவி, 2 மகன்களை வீட்டை விட்டு விரட்டிய முன்னாள் ராணுவ வீரர்
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பெண் ரயிலில் தனியாக பயணம் செய்யும்போது இது போன்ற இடர்பாடுகள் வருவதால் அவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் சிரமப்படுகின்றன. ஆகையால் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.