தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையா ? - மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்
தொடர்ந்து சிகிச்சை பெற்ற நிலையில் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ஆனந்தன் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார்.
சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அலட்சியத்தால் தவறான சிகிச்சை அளித்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீழவல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி என்பவரது மகன் 48 வயதான ஆனந்தன். இவருக்கு இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் கொள்ளிடம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
தவறான சிகிச்சை என குற்றச்சாட்டு
தொடர்ந்து சிகிச்சை பெற்ற நிலையில் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ஆனந்தன் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து மருத்துவர்கள் ஆனந்தனின் உறவினர்களிடம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் அலட்சியமாக செயல்பட்டு, ஆனந்தனுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் தான் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை மூடக்கோரியும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவமனை முன்பு ஏராளமான கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் திரண்டனர்.
TNPSC Group 1 Exam: டிஎன்பிஎஸ்சி 2024 குரூப் 1 முதன்மைத் தேர்வு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு
மருத்துவமனை வளாகம் சூறை
மேலும் மருத்துவமனை வாசலில் இருந்த கண்ணாடி கதவு அடித்து நெருக்கினர். பின்னர் ஆனந்தன் உடலை வாங்க மறுத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சீர்காழி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் ஈடுபட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் கொள்ளிடம்- சீர்காழி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உடல் கூறு ஆய்வுக்காக ஆனந்தனின் உடலை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் காவல்துறையினர் அனுப்பி வைத்து ஆணைக்காரன் சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலையில் நிலவி வருகிறது.
Sivaganga crime ; சந்தோஷமாக, சொந்த ஊருக்கு வந்த இளைஞர் வெட்டிப் படுகொலை, பழைய பகை காரணமா?