மேலும் அறிய

September Tamil Movies : 'தேவாரா' முதல் கார்த்தியின் 'மெய்யழகன்' வரை... செப்டம்பர் 27 வெளியாகும் படங்கள் என்னென்ன?

September 27 release movies : செப்டம்பர் 27ம் தேதி என்னென்ன திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாக உள்ளன என்பதை பார்க்கலாம். 

ஒவ்வொரு வாரமும் திரை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்:

மெய்யழகன் :

கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான 'ஜப்பான்' திரைப்படம் பெரிய அளவு வரவேற்பை பெறாத நிலையில் அவரின் அடுத்த படத்தின் ரிலீசுக்காக மக்கள் மிகவும் ஆர்வம் காத்திருக்கிறார்கள். அந்த வகையில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் '96' பட புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மெய்யழகன்'.

ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடிக்க கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக 'வா வாத்தியாரே' மற்றும் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி. 

September Tamil Movies :  'தேவாரா' முதல் கார்த்தியின் 'மெய்யழகன்' வரை... செப்டம்பர் 27 வெளியாகும் படங்கள் என்னென்ன?

தேவாரா பார்ட் 1 :

கொரட்டலா சிவா இயக்கத்தில் யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள திரைப்படம் 'தேவாரா'. பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க சைஃப் அலிகான் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷைன் டாம் சாக்கோ மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது. 

ஹிட்லர் :

செந்தூர் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் வானம் கொட்டட்டும், படை வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் தனா இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'ஹிட்லர்'. ரியா சுமன் கதயநாயகியாக நடிக்கும் இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சரண் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

நவீன்குமார் ஒளிப்பதிவு பணிகளை செய்ய விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.  

 பேட்ட ராப் :

தென்னிந்திய சினிமாவில் நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என மிகவும் பிரபலமான பர்சனாலிட்டியாக இருந்து வரும் நடிகர் பிரபு தேவா, நடிகர் விஜய்யுடன் இணைந்து 'தி கோட்' படத்தில் நடித்துள்ளார். அதே நேரத்தில் எஸ்.ஜே. சீனு இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பேட்ட ராப்'. வேதிகா ஹீரோயினாக நடிக்க விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஜோபி பி. சாம் தயாரித்துள்ளார். ஏற்கனவே படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.   
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lubber Panthu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Lubber Panthu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
"திருப்பதி லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்” திண்டுக்கல்லில்  இருந்து பிரச்சனைக்குரிய நெய் சப்ளை..!
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Exclusive:
Exclusive: "எங்கள் Raaj நெய் தரமானதுதான்” திருப்பதி லட்டு செய்ய நெய் அனுப்பிய AR Dairy நிறுவனம் விளக்கம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lubber Panthu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Lubber Panthu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
"திருப்பதி லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்” திண்டுக்கல்லில்  இருந்து பிரச்சனைக்குரிய நெய் சப்ளை..!
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Exclusive:
Exclusive: "எங்கள் Raaj நெய் தரமானதுதான்” திருப்பதி லட்டு செய்ய நெய் அனுப்பிய AR Dairy நிறுவனம் விளக்கம்..!
Breaking News LIVE, 20 Sep : திருப்பதி லட்டு விவகாரம் - 3 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கும் ஜெகன் மோகன் ரெட்டி
Breaking News LIVE, 20 Sep : திருப்பதி லட்டு விவகாரம் - 3 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கும் ஜெகன் மோகன் ரெட்டி
இதனால்தான் உதயநிதியை ஆட்சியில் அமர்த்தப் பார்க்கிறார் ஸ்டாலின் - கருப்பு முருகானந்தம்
இதனால்தான் உதயநிதியை ஆட்சியில் அமர்த்தப் பார்க்கிறார் ஸ்டாலின் - கருப்பு முருகானந்தம்
BYD eMAX 7 Vs Toyota Innova Hycross: பிஒய்டி இ-மேக்ஸ் 7 Vs டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் - ஈவியா? ஹைப்ரிட் ஆ?
BYD eMAX 7 Vs Toyota Innova Hycross: பிஒய்டி இ-மேக்ஸ் 7 Vs டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் - ஈவியா? ஹைப்ரிட் ஆ?
“சகோதரர் வேலுமணி - இன்னும் 19 அமாவாசைகள்தான்” பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி..!
“சகோதரர் வேலுமணி - இன்னும் 19 அமாவாசைகள்தான்” பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி..!
Embed widget