மேலும் அறிய

Netflix IC 814 Controversy: IC 814 வெப் சீரிஸால் வந்த வினை, நெட்ஃப்ளிக்ஸிற்கு பறந்த நோட்டீஸ் - மத்திய அரசு நடவடிக்கை ஏன்?

Netflix IC 814 Controversy: IC 814 வெப் சீரிஸ் சர்ச்சை தொடர்பாக, நெட்ஃப்ளிக்ஸிற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Netflix IC 814 Controversy: IC 814 வெப் சீரிஸில் இடம்பெற்றுள்ள தீவிரவாதிகளின் பெயர்களுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. 

IC 814 வெப் சீரிஸ் சர்ச்சை:

'IC 814: The Kandahar Hijack' என்ற வெப் சீரிஸை ஒளிபரப்பியது தொடர்பாக, Netflix இன் கண்டெண்ட் ஹெட்டிற்கு சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுபவ் சின்ஹா ​​இயக்கிய இந்தத் தொடர்ல், ஐசி 814 கடத்தல்காரர்களின் இஸ்லாமிய அடையாளங்களை மறைக்கும் வகையிலான மாற்றுப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து சர்ச்சையில் சிக்கியது. செப்டம்பர் 3 ஆம் தேதி செவ்வாய்கிழமை நேரில் ஆஜராகுமாறு Netflix இன் கண்டெண்ட் ஹெட்டை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. கடத்தப்பட்ட விமானத்தின் கேப்டனாக இருந்த தேவி சரண் மற்றும் பத்திரிக்கையாளர் ஸ்ரீஞ்சோய் சவுத்ரி ஆகியோர் எழுதிய 'ஃப்ளைட் இன்ட் ஃபியர்: தி கேப்டனின் ஸ்டோரி' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

பாஜக எதிர்ப்பு:

இதுதொடர்பாக பாஜகவின் ஐடி செல் தேசிய பொறுப்பாளர் அமித் மாளவியா, இயக்குனர் அனுபவ் சின்ஹாவை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், ”IC-814 ஐக் கடத்தியவர்கள் பயங்கரமான தீவிரவாதிகள், அவர்கள் இஸ்லாமிய அடையாளங்களை மறைக்க மாற்றுப்பெயர்களைப் பெற்றனர். திரைப்படத் தயாரிப்பாளர் அனுபவ் சின்ஹா, அவர்களது முஸ்லீம் அல்லாத பெயர்களை உயர்த்துவதன் மூலம் அவர்களின் குற்ற நோக்கத்தை சட்டப்பூர்வமாக்கினார். முடிவு? பல தசாப்தங்களுக்குப் பிறகு, IC-814 ஐ இந்துக்கள் கடத்தியதாக மக்கள் நினைப்பார்கள்” என குற்றம்சாட்டியுள்ளார்.

பயன்படுத்தப்பட்ட பெயர்கள் என்ன?

கடத்தலுக்கு காரணமான ஐந்து பேரும் தொடரில் 'ஹெட்', 'டாக்டர்', 'பர்கர்', 'போலா' மற்றும் 'சங்கர்' போன்ற குறியீட்டுப் பெயர்களுடன் சித்தரிக்கப்பட்டடுள்ளனர். அதில் 'போலா' மற்றும் 'சங்கர்' ஆகிய இரு பெயர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

உண்மை மறைக்கப்பட்டதா?

1999 இல் நடந்த இந்தியன் ஏர்லைன்ஸ் காத்மாண்டு-புது டெல்லி விமானத்தின் , கடத்தல் சம்பவத்தை மையமாக கொண்டு இந்த வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. அனுபவ் சின்ஹா, பயங்கரவாதிகளுக்கு மாற்றுப் பெயர்களாகப் பயன்படுத்தப்பட்ட இந்துப் பெயர்களைத் வேண்டுமென்றே தேர்ந்தெடுத்ததாக இணையத்தில் குற்றம்சாட்டப்படுகிறது. ​​உண்மைகளைத் தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தியதாகவும், மத முரண்பாடுகளைத் தூண்டுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால்,  வெப் சீரிஸில் பயன்படுத்தப்பட்ட குறியீட்டுப் பெயர்கள் 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட MEA ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 6, 2000 அன்று வெளியிடப்பட்ட MEA செய்திக்குறிப்பின்படி, கடத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, விமானத்தை கடத்திய ஐந்து தீவிரவாதிகளின் ஆதரவுப் பிரிவை உள்ளடக்கிய நான்கு ஐ.எஸ்.ஐ செயல்பாட்டாளர்களை மும்பை காவல்துறை பிடித்தது.

அந்த 5 பேரும் இப்ராகிம் அதர், ஷாகித் அக்தர் சயீத், குல்ஷன் இக்பால், சன்னி அகமது காசி, மிஸ்திரி ஜாகூர் இப்ராகிம் மற்றும் ஷகிர் என அடையாளம் காணப்பட்டனர். கடத்தப்பட்ட விமானத்தின் பயணிகளுக்கு இந்த கடத்தல்காரர்கள் முறையே (1) ஹெட், (2) டாக்டர், (3) பர்கர், (4) போலா மற்றும் (5) சங்கர்” என அறியப்பட்டனர். வெப் சீரிஸிலும் கடத்தல்காரர்களுக்கு அதே குறியீட்டுப் பெயர்களைப் பயன்படுத்துகின்றன. ஒரு அத்தியாயத்தில், அதுவரை 'ஹெட்' என்று அழைக்கப்பட்ட தீசிரவாதிகளில் ஒருவரின் பெயர் 'இப்ராஹிம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget