சீர்காழி அருகே நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள்... மீண்டும் இயக்க கிராம மக்கள் கோரிக்கை
சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசலுக்கு இயங்கிய பேருந்துங்களை மீண்டும் இயக்க வேண்டும் என அப்போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் ஊராட்சி சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்துவரும் மாவட்டத்தின் மிக முக்கிய பெரிய கிராமம் ஆகும். இவ்வூராட்சியில் சீர்காழியில் செம்மங்குடி, விநாயக்குடி, கடவாசல், வடகால், வருஷபத்து, எடமணல், ராதாநல்லூர், வழுதலைக்குடி, திருமுல்லைவாசல், தொடுவாய் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கல்வி நிலையங்கள், வேலைவாய்ப்பு, சுகாதாரம், தாலுக்கா அலுவலகம், காவல் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், மீன்வளத்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கும் அன்றாட தேவைகளுக்கும் சீர்காழிக்கு தான் செல்ல வேண்டும்.
மேலும், திருமுல்லைவாசல் கிராமத்தில் மீன்பிடி துறைமுகத்தில் பிடிக்கப்படும் மீன்கள் அங்குள்ள சிறு வியாபாரிகள் பேருந்து மூலம் சீர்காழி வழியாக தான் மற்ற ஊர்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்நிலையில் கடந்த காலங்களில் இந்த ஊராட்சிக்கு சீர்காழி கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சீர்காழி கிளையில் இருந்து A3, B3, C3, D3, 13 ஆகிய ஐந்து பேருந்துகளும், தனியார் பேருந்துகள் இரண்டும் என மொத்தம் 7 பேருந்துகள் சென்று வந்தன. ஆனால் தற்போது அரசு சார்பில் இயக்கப்பட்ட அந்த பேருந்துகள் குறைக்கப்பட்டு, ஒரு சில பேருந்துகள் மட்டும், அதும் நீண்ட நேர இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் காலை, மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பள்ளி மாணவர்கள் மிகவும் ஆபத்தான முறையில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. போதிய பேருந்து வசதி இல்லாததால் அடிக்கடி கூடுதல் இயக்கக்கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமுல்லைவாசல் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி நீண்ட கடற்கரையை கொண்ட ஊராட்சி ஆகும்.
இவர்களில் பெரும்பான்மையானோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மேல் படிப்பு, அரசு அலுவலகங்கள், காவல் நிலையம் உள்ளிட்டவைகளுக்கு செல்ல வேண்டுமானால் சீர்காழிக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் போதிய அளவு பேருந்து வசதி இல்லாததால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகிறோம். பள்ளி நேரங்களில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதால் மாணவர்கள் விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். எனவே தமிழக அரசு இப்பகுதி பொதுமக்கள் நலன் கருதி சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசலுக்கு தினமும் முன்பு இயங்ய பேருந்துகள் அனைத்தையும் இயக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மிகப்பெரிய அளவில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.
OPS Vs EPS: ரகசியங்களை காலம் வரும்போது வெளியிடுவேன் - இபிஎஸ்க்கு செக் வைக்கும் ஓபிஎஸ்!