ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் - காரணம் இதுதான்
குத்தாலம் அருகே ஆனைமேலகரம் ஊராட்சி மன்ற அலுவலக முன்பு 100 நாள் வேலை வழங்க கோரி 100 -க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குத்தாலம் அருகே ஆனைமேலகரம் ஊராட்சி மன்ற அலுவலக முன்பு 100 நாள் வேலை வழங்க கோரி ஏராளமான பெண்கள் திரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூறு நாள் வேலைத் திட்டம்
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
எட்டு மாதங்களாக நடைபெறாத நூறு நாள் வேலை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆணைமேலகரம் ஊராட்சியில் கடந்த எட்டு மாத காலமாக நூறு நாள் வேலை வழங்காமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஆணைமேலகரம் ஊராட்சி அலுவலகம் முன்பு 8 மாதம் காலங்களாக 100 நாள் வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 100 நாள் வேலை கேட்டு வார்டு உறுப்பினர் ரமேஷ், ராஜா ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Xiaomi SU7: ஸ்மார்ட் ஃபோன் டூ மின்சார கார்! இந்தியா வருகிறது ஷாவ்மி நிறுவனத்தின் SU7 மின்சார கார்
திடீர் தர்ணா போராட்டம்
ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் பாரபட்சம் இன்றி 100 நாள் வேலை வழங்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் கலெக்டர் சபீர் ஆலம், மற்றும் குத்தாலம் காவல் ஆய்வாளர் ஜோதி ராமன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
கூடுதல் ஆட்சியர் பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் ஆட்சியர் சபீர் ஆலம் உறுதியளித்ததை அடுத்து அதனை ஏற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.
Accident: விபத்தில் சிக்கிய பேருந்து! 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கதி என்ன?