மேலும் அறிய

சீர்காழி அருகே உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு மரியாதை செலுத்திய கோட்டாட்சியர்

சீர்காழி அருகே உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய முதியவரின் உடலுக்கு அரசு மரியாதையை கோட்டாட்சியர் அர்ச்சனா செலுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த உமையாள்பதி கிராமத்தை சேர்ந்தவர் 56 வயதான சேகர். கூலி தொழிலாளியான இவர், கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சேகர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதனை அடுத்து  அவரின் உடல் உறுப்புகள் அனைத்தும் தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள்  தானமாக பெறப்பட்டது.

சீர்காழி அருகே உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு மரியாதை செலுத்திய கோட்டாட்சியர்

இந்நிலையில் உடல் உறுப்புகள் செயலிழந்து உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய குடும்பத்தாருக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நன்றி தெரிவித்தார். மேலும் இறந்த சேகர் உடலுக்கு மலர் வளையம் வைத்து வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, வட்டாச்சியர் இளங்கோவன் ஆகியோர் அரசு மரியாதை செலுத்தினர்.  இறந்த சேகருக்கு அமுதா என்ற மனைவியும் இலக்கியா, இன்பரசி, இந்துமதி உள்ளிட்ட நான்கு மகள்களும் ஒரு மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இறந்த நிலையிலும் தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கி மற்ற உயிரை காப்பாற்றிய சேகரையும் அவரது குடும்பத்தினரையும் கிராம மக்கள் ஆறுதல் தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர்.

சீர்காழி அருகே உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு மரியாதை செலுத்திய கோட்டாட்சியர்

விழிப்புணர்வுகள் இல்லாத காரணம்

விபத்து, புற்றுநோய், பிறவி குறைபாடு மற்றும் தீக்காயம் உள்ளிட்டவையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு,  அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு மாற்று உறுப்புகள் தேவைப்படுவதன் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்களிடையே சாலை பாதுகாப்புகள் மற்றும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வுகள் இல்லாத காரணத்தால், நாள்தோறும் ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது.  இதனால் பெரிய அளவிலான ஆபத்துக்களும், சில சமையங்களில் மூளைச்சாவு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. இதனை அடுத்து, விபத்துகளில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகள் யாருக்கும் பலனில்லாமல் வீணாகிறது.  உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் இதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.  

சீர்காழி அருகே உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு மரியாதை செலுத்திய கோட்டாட்சியர்

உடல் உறுப்பு தானம் பெறுவதற்காக காத்திருப்பவர்கள் எண்ணிக்கை

குறிப்பாக தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகத்திற்கு 6,322 பேர்,  கல்லீரலுக்கு 438 பேர், இதயத்திற்கு 76 பேர், நுரையீரலுக்கு 64 பேர், இதயம் மற்றும் நுரையீரலுக்கு 25 பேர், கைகளுக்கு 27 பேர்,  சிறுகுடலுக்கு 2 பேர், சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கு 40 பேர் காத்திருக்கின்றனர். இதேபோல் சிறுநீரகம் மற்றும் கணையத்திற்கு 42 பேர், சிறுகுடல் மற்றும் வயிற்றுக்கு ஒருவர் என்று மொத்தம் 7,037 பேர் உடல் உறுப்பு தானம் பெறுவதற்காக காத்திருக்கின்றனர்.

அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு அறிவித்த தமிழக அரசு

இந்நிலையில், கடந்த ஆண்டு 2023 செப்டம்பர் 23 -ம் தேதி  உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு,  அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.  அதன்படி, மூளைச்சாவு அடைந்த நபர்களின் உறவினர்கள்,  உடல் உறுப்பு தானம் அளிக்க ஒப்புதல் அளித்தவுடன், உடல் உறுப்புகள் பெறப்படுகிறது.  தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சரின்  இந்த அறிவிப்பை தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இறந்த பிறகு அரசு மரியாதை என்ற அங்கீகாரம் வழங்கப்படுவதால் பலர் மனமுவந்து உறுப்புகளை தானம் செய்து வருகிறார்கள். இறந்த பிறகு பயனற்று போகும் உறுப்புகளை பலருக்கு வழங்குவதன் மூலம் சம்பந்தப்பட்டவர் மறைவுக்கு பிறகும் பலரை வாழ வைக்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
Embed widget