மேலும் அறிய

17 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணைக்கு சென்ற தந்தை இன்றுவரை வீடு திரும்பாத சோகம் - தேடும் பெண் பிள்ளைகள்

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை 17 ஆண்டுகள் ஆகிய நிலையில் திரும்பி வராததால் அவரை கண்டுபிடித்து தரக்கோரி மூன்று பெண் பிள்ளைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை அருகே மதுவிலக்கு காவலர்களால் 2007 ஆம் ஆண்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் காணாமல் போன தங்களது தந்தை குறித்து சிறப்பு தனிப்படை, சிபிசிஐடி, சிபிஐ விசாரணை நடத்தியும் 17 ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், அவரை கண்டுபிடித்து தரக்கோரியும் ஆட்சியர் அலுவலகத்தில் மகள்கள் கோரிக்கை விடுத்து மனு அளித்துள்ளனர்.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை 

மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் சரகத்திற்கு உள்பட்ட எழுமகளூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயக் கூலி தொழிலாளி சத்தியசீலன். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி பெரம்பூர் பாலம் அருகில் நின்றிருந்த போது சந்தேகத்தின் பேரில் அப்போதைய மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன், தலைமை காவலர் உத்திராபதி ஆகியோர் சத்தியசீலனை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சத்தியசீலன் காணாமல் போனதால், அவரது மனைவி வனிதா பெரம்பூர் மற்றும் பாலையூர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளார். 

17 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணைக்கு சென்ற தந்தை இன்றுவரை வீடு திரும்பாத சோகம் - தேடும் பெண் பிள்ளைகள்

சிபிசிஐடி - சிபிஐ விசாரணை 

அதன் பின்னரும் சத்தியசீலன் கண்டறியப்படாத நிலையில், அவரை கண்டுபிடித்து தரக் கோரி வனிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் 2007, 2008 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் 27‌‌.04.2008-இல் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது. ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் சத்தியசீலன் கண்டுபிடிக்கப்படாததால் இந்த வழக்கு 2013-ல் மத்திய குற்ற புலனாய்வு துறைக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது. ஆனால் சிபிஐ சத்தியசீலனை கண்டுபிடிக்க முடியவில்லை என அறிக்கை தாக்கல் செய்ததன் அடிப்படையில், இவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டது.

NEET Leak: 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு? முக்கிய விவரங்கள் லீக் ஆனதால் தேர்வர்கள் அதிர்ச்சி!

17 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணைக்கு சென்ற தந்தை இன்றுவரை வீடு திரும்பாத சோகம் - தேடும் பெண் பிள்ளைகள்

தந்தை காணமால் போன நிலையில் தாயும் உயிரிழப்பு 

சத்தியசீலன் காணாமல் போன நாள்முதல் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்த வனிதா, கடந்த ஜூன் மாதம் 3-ஆம் தேதி கிள்ளியூர் கிராமத்துக்கு விவசாயக் கூலி வேலைக்கு சென்றபோது பாம்பு கடித்து பரிதாபம் உயிரிழந்தார். சத்தியசீலன் காணாமல் போனபோது 4, 2, 1 வயது குழந்தைகளாக இருந்த அவரது மூன்று மகள்களும் தற்போது தாயும் உயிரிழந்த நிலையில், 17 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தங்களது தந்தையை தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணை குழு (காவல்துறை) அமைத்து கண்டுபிடித்து தருமாறும்,

Petrol Bomb Attack: "எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு" சேலத்தில் பரபரப்பு..!

17 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணைக்கு சென்ற தந்தை இன்றுவரை வீடு திரும்பாத சோகம் - தேடும் பெண் பிள்ளைகள்

டிப்ளமோ மருத்துவமனை நிர்வாக மேலாண்மை படித்துள்ள தனக்கும் பத்தாம் வகுப்பு படித்துள்ள தனது சகோதரி லாவண்யா, பட்டப் படிப்பு படித்து வரும் ஹேமாவதி ஆகிய நாங்கள் தாய் தந்தை இல்லாமல் நிற்கதியாக உள்ள நிலையில், தங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் வீட்டுமனை பட்டா மற்றும் குடியிருப்பு அரசு வேலைவாய்ப்பு நிவாரணத் தொகை வழங்கிட வேண்டுமென்று சத்தியசீலனின் மூத்த மகள் வர்ஷா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த மனுவை அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் தனி பிரிவுக்கும், காவல்துறை இயக்குனர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget