மேலும் அறிய

விபத்தில் பலத்த காயம், உதவி கேட்டு பாதி சிகிச்சையில் ஆட்சியரை காண வந்த நபரால் பரபரப்பு

விபத்தில் படுகாயம் அடைந்த மயிலாடுதுறை லாரி ஓட்டுநர், லாரி உரிமையாளர் உட்பட யாரும் சிகிச்சைக்கு உதவவில்லை என கூறி தலை மற்றும் கைகளில் கட்டுகளுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

ஒடிசாவில் விபத்தில் படுகாயம் அடைந்த மயிலாடுதுறையை சேர்ந்த லாரி ஓட்டுநர், லாரி உரிமையாளர் உட்பட யாரும் கண்டுகொள்ளாததால் மருத்துவ சிகிச்சையை தொடர முடியாமல் தவித்து வருவதாக தலை மற்றும் கைகளில் கட்டு போட்டதுடன் சிகிச்சையில் இருந்து பாதியிலேயே வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

செருதியூர் கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் ரமேஷ்

மயிலாடுதுறை மாவட்டம்  செருதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கையன் என்பவரது மகன் ரமேஷ். ஓட்டுனராக பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணம் ஆகி, நான்கு  குழந்தைகள் உள்ளனர்‌. இவர் நாமக்கல்லை சேர்ந்த தனியார் லாரி உரிமையாளர் மோகனரங்கம் என்பவரிடம் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். 

சாலையோரம் வசிக்கும் குழந்தைகளுடன் சூர்யா பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள் - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி


விபத்தில் பலத்த காயம், உதவி கேட்டு பாதி சிகிச்சையில் ஆட்சியரை காண வந்த நபரால் பரபரப்பு

விபத்துக்குள்ளான பயோ டீசல் லாரி

இந்த நிலையில்  கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு பயோ டீசல் ஏற்றிக்கொண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ளார் ‌. அங்கு ஐஓசி நிறுவனத்தில் பயோ டீசலை கொடுக்கச் சென்ற நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை அடுத்த  பத்ராக் பகுதியில் லாரியின் டயர் வெடித்து அதனால் வாகனம் நிலை தடுமாறி முன்னாள் சென்ற மற்றொரு லாரி மீது மோதிய விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் லாரியை ஓட்டிச் சென்ற ரமேஷ் கை மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்துள்ளனர். 

Budget 2024: இறக்குமதி வரி குறைப்பு; குறையும் மொபைல் போன் விலை - பட்ஜெட்டில் அறிவிப்பு!


விபத்தில் பலத்த காயம், உதவி கேட்டு பாதி சிகிச்சையில் ஆட்சியரை காண வந்த நபரால் பரபரப்பு

வழக்கு பதியாமல் மீட்கப்பட்ட விபத்துக்குள்ளான லாரி

இந்த விபத்து குறித்து அறிந்து அங்கு வந்த லாரி உரிமையாளர் மோகனரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதியாமலும், விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த லாரி ஓட்டுநர் ரமேஷையும் பார்க்காமல் லாரியை மீட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் காப்பீடு தொகையும் கிடைக்கவில்லை. பின்னர் உறவினர்கள் ஒடிசா மாநிலத்திற்கு சென்று விபத்துக்குள்ளான ரமேஷை மீட்டு மயிலாடுதுறைக்கு அழைத்து வந்துள்ளனர். 

Budget 2024 Cheaper and Costly: மத்திய பட்ஜெட்; விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள் என்னென்ன?- முழு பட்டியல் இதோ!


விபத்தில் பலத்த காயம், உதவி கேட்டு பாதி சிகிச்சையில் ஆட்சியரை காண வந்த நபரால் பரபரப்பு

சிகிச்சையை  தொடர்வதில் சிக்கல் 

தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் ரமேஷ், தற்போது வரை லட்சக் கணக்கில் பணம் செலவு செய்துள்ளதாகவும், இதனால் தற்போது வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக கூறி மருத்துவமனையில் இருந்து கை,  கால் மற்றும் தலையில் கட்டுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வருகை தந்து மனு அளித்தார். மேலும் லாரி உரிமையாளரிடம் நிதியுதவி பெற்று தர வேண்டும் எனவும், மேற்கொண்டு சிகிச்சையை தொடர மாவட்ட நிர்வாகம் ஏதேனும் வழிவகை செய்ய வேண்டும் எனவும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மருத்துவமனையில் இருந்து காயங்களுடன் வாழ்வாதார காக்க கோரி விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்துடன் மனு அளித்த சம்பவம் காண்போரை கண் கலங்க செய்துள்ளது.

Union Budget 2024: ஏஞ்சல் வரியை முற்றிலுமாக ஒழிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு - ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன?

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

துடிதுடித்த மயில்... ஓடிவந்து தண்ணீர் கொடுத்துக் காப்பாற்றிய பயணிகள் - சீர்காழியில் நெகிழ்ச்சி!
துடிதுடித்த மயில்... ஓடிவந்து தண்ணீர் கொடுத்துக் காப்பாற்றிய பயணிகள் - சீர்காழியில் நெகிழ்ச்சி!
காரைக்காலில் இருந்து கிளம்பிய கார்... சீர்காழி பாலத்தில் காத்திருந்த ட்விஸ்ட்! எஸ்பி-யின் அதிரடி ஆபரேஷன்!
காரைக்காலில் இருந்து கிளம்பிய கார்... சீர்காழி பாலத்தில் காத்திருந்த ட்விஸ்ட்! எஸ்பி-யின் அதிரடி ஆபரேஷன்!
3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு
3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு
திமுக, அதிமுகவுக்குப் பின்னடைவா? சீர்காழியில் கொத்துக் கொத்தாகத் தவெகவில் இணையும் மாற்றுக்கட்சியினர்.
திமுக, அதிமுகவுக்குப் பின்னடைவா? சீர்காழியில் கொத்துக் கொத்தாகத் தவெகவில் இணையும் மாற்றுக்கட்சியினர்.

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
Top 3 Most Fuel Efficient Hybrid SUVs: ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
Embed widget