டெங்குவை கட்டுப்படுத்த களத்தில் இறங்கிய மயிலாடுதுறை மருத்துவ குழுவினர்
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால் உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடியது. இதனால் ஆரம்ப காலத்தில் டெங்கு காய்ச்சலால் குறித்து கண்டறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
மயிலாடுதுறையில் தேசிய டெங்கு தடுப்பு தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் பொதுமக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
தேசிய டெங்கு தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 16-ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. டெங்கு வைரஸ், கொசுவினால் உண்டாகும் மிக பயங்கரமான நோய்களில் ஒன்று, ஒருவர் முறையான பராமரிப்பு எடுத்தால் தடுக்கப்படலாம். இந்த நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு எளிய வழி உங்கள் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருப்பதை உறுதி செய்வதாகும். 1779 -ன் ஆரம்பம் முதல் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதாக மருத்துவ தரவுகள் கூறுகின்றனர். எனினும் பரவலுக்கான விவரங்கள் மற்றும் நோய்களுக்கான காரணம் குறித்து 20 -ஆம் நூற்றாண்டில் தான் முழுமையாக தெரியவந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைப்பிக்கப்பட்ட தேசிய டெங்கு தடுப்பு தினம்
இந்நிலையில், இந்தாண்டு தேசிய டெங்கு தடுப்பு தினம் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் காளி வட்டார அரசு ஆரம்ப சுகாதாரத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் அஜித் பிரபு குமார் உத்தரவின் பேரில் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு வல்லுநர் மருத்துவர் பிரவீன், மாவட்ட பூச்சியில் வல்லுநர் இளங்கோவன், காளி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கிளிட்டன் ஜூட், காளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொறுப்பு மருத்துவ அலுவலர் மருத்துவர் மணிகண்டன் இவர்களின் முன்னிலையில் தேசிய டெங்கு தினம் விழிப்புணர்வு நடைபெற்றது.
இதில் மயிலாடுதுறை வட்டார சுகாதார ஆய்வாளர் பாஸ்கர் டெங்கு பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் மருத்துவர்கள், மருந்தாளுனர், ஆய்வக நட்புநர், சமுதாய சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், RCH, NCD, MLHP செவிலியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், டெங்கு களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, தேசிய டெங்கு கொசு ஒழிப்பு தின சுகாதார உறுதிமொழி ஏற்றனர். மற்றும் டெங்கு பற்றிய துண்டு பிரசாரங்கள் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது. இறுதியில் மூத்த சுகாதார ஆய்வாளர் நடராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
மேலும் டெங்கு காய்ச்சலால் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால் உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடியது. இதனால் ஆரம்ப காலத்தில் டெங்கு காய்ச்சலால் குறித்து கண்டறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். டெங்குவைக் குறிக்கக் கூடிய சில அறிகள் பற்றி நாம் பார்க்கலாம். டெங்குவினால் அவதிப்படக்கூடியவர்கள் வழக்கமாக பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள்.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்
1. அதிக காய்ச்சல்
2. தலைவலி
3. வாந்தி
4. தசை மற்றும் மூட்டுவலி
5. தோல் தடிப்புகள்
இந்த அறிகுறிகள் டெங்குவை குறிக்கும் அறிகுறிகள் ஆகும். மேலும் சில சமயங்களில் இவைகள் இல்லாமலும் இருக்கலாம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் ஒருவருக்கு தென்பட்ட அவர்கள் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. எனினும் இவை நோயின் ஆரம்ப அறிகுறிகள் தான். சில நேரங்களில் மக்கள் அவற்றைப் புறக்கணிக்கக்கூடும் இதனால் அது டெங்குவின் மிகத் தீவிர வடிவமாக உருவாகக் கூடும்.
தீவிர டெங்குவின் அறிகுறிகள்
1. இரத்தப் போக்கு
2. இரத்தவட்டுக்களின் எண்ணிக்கை குறைதல்
3. இரத்தப் பிளாஸ்மா கசிவது
4. குறைந்த இரத்த அழுத்தம்
டெங்கு ஒரு அபாயமான நோய் என்பதை ஒருவர் மனதில் கொள்ள வேண்டும் மற்றும் அவர்கள் ஆரம்ப அறிகுறிகளின் போதே மருத்துவ உதவியை உடனடியாக கோர வேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது. இந்த நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு எளிய வழி உங்கள் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருப்பதை உறுதி செய்வதாகும்.
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்
1. உங்கள் வீட்டை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.
2 வீட்டில் அல்லது வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கிக் கிடக்க விடாதீர்கள்.
3 மழைக்காலங்ளில் தேங்கிக்கிடக்கும் நன்னீர் அளவு அதிகரிப்பன் காரணமாக டெங்குவினால் –கொசுவினால் உங்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்; இந்த நிலையில் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் பயன்படுத்தப்பட வேண்டும்.
டெங்கு காய்ச்சல் உண்டாக்கும் கொசுவினால் பரவும் நோயாகும். அது பல்வேறு வகையான ஏடிஸ் கொசுவினால் பரவுகிறது. இரண்டாம் உலகப் போர் துவங்கியது முதலே டெங்கு காய்ச்சல் உலகளாவிய கவலையளிக்கும் நோயாக இருந்து வருகிறது.