மேலும் அறிய

மத்திய அரசைத் திருப்திப்படுத்த வேண்டும், அவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்பதற்காக ஆளுநர் செயல்படுகிறார் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

வேதநாயகத்திற்கு மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட நினைவு அரங்கம் மற்றும் சிலை கட்டுமானப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை: தமிழின் முதல் நாவலாசிரியரும், சமூக சீர்திருத்தவாதியுமான மாயூரம் முன்சீப் வேதநாயகத்திற்கு மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட நினைவு அரங்கம் மற்றும் சிலை கட்டுமானப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட காவேரி நகர் பகுதியில் நடைபெற்று வரும் இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், எம்.எல்.ஏக்கள் எஸ்.இராஜகுமார் (மயிலாடுதுறை), எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி) ஆகியோர் உடனிருந்தனர்.

கட்டுமானப் பணிகள் தீவிரம்: அமைச்சர் விளக்கம்

ஆய்விற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது; "தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படியும், துணை முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படியும், தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம் பதித்த மாயூரம் முன்சீப் வேதநாயகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் இத்திட்டத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, பணிகளின் கூடுதல் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூடுதலாக ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, மொத்தம் ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன."

இந்த அரங்கமானது சுமார் 9,500 சதுர அடி பரப்பளவில் அமைய உள்ளது.

 * அரங்கத்தைச் சுற்றி பாதுகாப்புச் சுற்றுச்சுவர் மற்றும் முறையான அணுகுசாலை.

 * அரங்கத்தின் உட்புறம் நவீன வசதிகளுடன் கூடிய ஒப்பனை அறைகள்.

 * முன்புற பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட பேவர் பிளாக் கற்கள் பதித்தல்.

 * தடையற்ற குடிநீர் வசதிக்காகப் புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல்.

மேலும், மயிலாடுதுறை நகராட்சி அலுவலக வளாகத்தில் முன்சீப் வேதநாயகத்தின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கம் மற்றும் சிலை ஆகியவற்றைத் தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆளுநரின் செயல்பாடு குறித்த விமர்சனம்

சட்டப்பேரவையின் முதல் நாளில் ஆளுநர் உரை நிகழ்த்தியபோது, தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததைக் கண்டித்து ஆளுநர் கூட்டத்தைப் புறக்கணித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் காரசாரமாகப் பதிலளித்தார்.

"தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் மரபுப்படி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால், மத்திய அரசைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்பதற்காகவும் ஆளுநர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். இதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை," என்றார்.

மேலும், "வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்குச் சிலை அமைத்துச் சிறப்புச் செய்தவர் நம் முதலமைச்சர். ஆனால், மத்திய அரசு அவருக்கு உரிய முறையில் சிலை அல்லது மணிமண்டபம் அமைக்கவில்லை" என்று சாடினார்.

பெயர் மாற்றக் கோரிக்கைகள் குறித்து

பெயர் பலகைகளில் சாதிப் பெயர்கள் நீக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஜி.டி. நாயுடு போன்ற பெயர்களில் அது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. மேலும், மயிலாடுதுறையில் 'சுவாமி நாகப்ப படையாட்சி' என்று பெயர் வைக்க வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு செல்லப்படும்," என உறுதியளித்தார்.

ஆய்வில் பங்கேற்ற அதிகாரிகள்

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின், பொதுப்பணித்துறை (கட்டிடம் மற்றும் பராமரிப்பு) செயற்பொறியாளர் கவிதா, உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதேவி, வட்டாட்சியர் சுகுமாரன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
விவசாயிகளே அலர்ட்! அக்டோபர் 22-ல் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..
விவசாயிகளே அலர்ட்! அக்டோபர் 22-ல் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..
கட்டியும் பலனில்லை! 16 ஆண்டாக அந்தரத்தில் தொங்கும் பாலம்: கொந்தளிப்பில் மீனவ கிராம மக்கள்..
கட்டியும் பலனில்லை! 16 ஆண்டாக அந்தரத்தில் தொங்கும் பாலம்: கொந்தளிப்பில் மீனவ கிராம மக்கள்..
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget