மேலும் அறிய

பார்வதிதேவியிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தர் - பார்த்து பரவசம் அடைந்த பக்தர்கள்...!

சீர்காழி பிரமபுரீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருமுலைப்பால் உற்சவ விழாவில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

சீர்காழி பிரமபுரீஸ்வரர் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற திருமுலைப்பால் உற்சவ விழாவில் தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருஞானசம்பந்தர் தங்க கிண்ணத்தில் ஞானப்பால் வழங்கும் நிகழ்வை கண்டு தரிசனம் செய்தனர்.

சீர்காழி சட்டைநாதர் கோயில் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 

பார்வதிதேவியிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தர் - பார்த்து பரவசம் அடைந்த பக்தர்கள்...!

திருஞானசம்பந்தர் வரலாறு

சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. சங்கம முர்த்தமான சட்டைநாதர் விஷ்ணுவின் தோலை சட்டையாக உடுத்தியதால் இப்பெயர் உண்டாயிற்று. சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் இக்கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் கரையில் அழுது நின்ற போது உமையம்மை ஞானப்பால் வழங்கி, இறைவனுடன் காட்சி அளித்த ஸ்தலமாகவும், ஞானம் பெற்ற திருஞானசம்பந்த பெருமான் தனது 3வது வயதில் தோடுடைய செவியன் என்ற முதல் தேவாரப் பதிகத்தை அருளிய தளமாகவும் விளங்கி வருகிறது. 

பார்வதிதேவியிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தர் - பார்த்து பரவசம் அடைந்த பக்தர்கள்...!

சித்திரை பெருவிழா

இத்தகைய சிறப்பு மிக்க கோயிலில் சித்திரை பெருவிழா ஆண்டுதோறும் சித்திரை 1-ஆம் தேதி தொடங்கி 20 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு சித்திரை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-ம் நாளான இன்று திருமுலைப்பால் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள திருஞானசம்பந்த பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிவிகை பல்லக்கில் திருஞானசம்பந்தர் பிரம தீர்த்த கரையில் எழுந்தருள, தருமபுரம் ஆதீனம் 27 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் திருநிலை நாயகி அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி தங்க கிண்ணத்தில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருஞானசம்பந்தருக்கு காட்சியளிக்கும் வைபோகமும் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குழந்தைகள் ஞானம் பெற வேண்டி சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு பழங்கள் கலந்த பாலினை நைவேத்தியம் செய்து வழிபாடு நடத்தினர். 

பார்வதிதேவியிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தர் - பார்த்து பரவசம் அடைந்த பக்தர்கள்...!

முக்கிய நிகழ்வுகள் 

திருமலைப்பால் விழாவில் மற்றொரு நிகழ்வாக திருஞானசம்பந்தர் திருக்கோளக்காவிற்கு எழுந்தருளி திருப்பதிகம் பாடி பொற்றாலம் பெற்று பள்ளத்தில் சீர்காழி மீண்டருளும் காட்சி நடைபெறுகிறது. சித்திரை பெருவிழாவின் பிற முக்கிய நிகழ்வுகளாக 5 -ம் தேதி சரகோபுரம், 6 -ஆம் தேதி திருக்கல்யாணம், 8-ஆம் தேதி திருத்தேர் உற்சவம், 13-ஆம் தேதி தெப்ப உற்சவம், 23 -ம் தேதி முத்து சட்டைநாதர் உற்சவமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி செந்தில் தலைமையிலான சிப்பந்திகள் செய்திருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் தீடீரென வைக்கப்பட்ட மனுபெட்டி..! ஏன் தெரியுமா..?
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் தீடீரென வைக்கப்பட்ட மனுபெட்டி..! ஏன் தெரியுமா..?
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் - பகுதிநேர ஆசிரியர்கள் ஆவேசம்..
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் - பகுதிநேர ஆசிரியர்கள் ஆவேசம்..
மூன்று குளங்களில் புனித நீராடினால் எம பயம் நீங்குமா? திருவெண்காட்டில் நடந்த விசேஷ தீர்த்தவாரி! 
மூன்று குளங்களில் புனித நீராடினால் எம பயம் நீங்குமா? திருவெண்காட்டில் நடந்த விசேஷ தீர்த்தவாரி! 
மயிலாடுதுறையில் காவல்துறையினர் அதிரடி: பஸ்பம் ஆன 740 கிலோ போதைப்பொருட்கள்...!
மயிலாடுதுறையில் காவல்துறையினர் அதிரடி: பஸ்பம் ஆன 740 கிலோ போதைப்பொருட்கள்...!
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 27 வரை விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 27 வரை விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?
TVK Vijay: ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?
125cc Scooters: லோ பட்ஜெட்டில் ஹை சம்பவம்..! கனெக்டட் டெக்குடன் மிரட்டும் 125சிசி ஸ்கூட்டர்கள் - மைலேஜ், விலை
125cc Scooters: லோ பட்ஜெட்டில் ஹை சம்பவம்..! கனெக்டட் டெக்குடன் மிரட்டும் 125சிசி ஸ்கூட்டர்கள் - மைலேஜ், விலை
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Netanyahu New Video: “நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
“நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
Embed widget