சீர்காழியில் மனைவி நலவேட்பு விழா! கணவன் மனைவிக்கு, மனைவி கணவனுக்கும் மரியாதை செய்யும் விழா - எங்கு தெரியுமா..?
சீர்காழியில் மனைவிக்கு கணவனும், கணவனும் மனைவியும் மரியாதை செய்த மனைவி நலவேட்பு விழா நடைபெற்றது.
சீர்காழியில் மனைவிக்கு கணவனும், கணவனும் மனைவியும் மரியாதை செய்த மனைவி நலவேட்பு விழா நடைபெற்றது.
கணவன் - மனைவி என்னும் பந்தத்தைவிட புனிதமான உறவு இவ்வுலகில் வேறொன்று இருக்க முடியாது. புனிமானது மட்டுமல்ல, இதயத்திற்கு மிக நெருக்கமானதும், வாழ்வின் இறுதி வரையில் தொடர்ந்திருப்பதும் அந்த உறவுதான். பெற்றோர் பார்த்துச் செய்துவைத்த திருமணமானாலும், காதலித்துச் செய்துகொண்ட திருமணமென்றாலும், கணவன் - மனைவி என்றானபின் இல்லற நியதிகளும் கடமைகளும் ஒன்றுதான். இல்லறம் என்பது குடும்ப வாழ்வின் மூலம் இருவரும் இணைந்து ஆற்ற வேண்டிய அறச்செயல்களுக்கான களம்.
அறச்செயல்கள் அனைத்திற்கும் அன்பே அடிநாதம். புரிதலுடன்கூடிய தம்பதியரின் நல்லுறவு, ஒழுக்க நெறியில் குழந்தை வளர்ப்பு, பெற்றோர் பராமரிப்பு, உறவு பேணுதல், உதவி புரிதல் ஆகியவையே நல்ல குடும்பத்தின் உட்கூறுகள். குடும்பம் என்னும் ஓர் ஒழுங்கமைவு இல்லாதிருந்த காலத்தில், மனித இனம் எப்படி இருந்திருக்கும். யோசித்துப் பாருங்கள்.
விலங்குக்கும் தனக்கும் வேறுபாடில்லாத ஒரு வாழ்க்கையைத்தானே அன்று மனிதன் வாழ்ந்திருப்பான். ஆனால், காலம் கனிந்த போது குடும்ப அமைப்பு உருவானது. மனித சமுதாயத்தின் மிகத் தொன்மையான அமைப்பு குடும்ப அமைப்பு உருவானது. மனித சமுதாயத்தின் மிகத் தொன்மையான அமைப்பு குடும்பம்தான். அந்த அமைப்பை ஏற்படுத்துவது திருமணம். திருமணம், குடும்பம் ஆகியவை பிற்காலத்தில் வந்த சொல்லாட்சிதான். தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் இச்சொல்லாட்சி இடம்பெற்றதாகத் தெரியவில்லை என்று தமிழ் ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர். குடிமை, குடி, கூடி என்னும் சொற்களே சங்க இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், குடும்பம் என்னும் சொல் முதன்முதலாய் திருக்குறளில்தான் கையாளப்பட்டுள்ளது.
" இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு"
மனைவி நல விழா
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மனைவின் உறவு மேம்பாடு அடைவதற்கு மனைவி நல விழா பெஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கணவன் - மனைவி உறவுகள் மேம்பாடு அடைவதற்கும் குடும்பங்களில் இன்னல்கள் தீர்வதற்கும் வழி வகுக்கும் வகையில் இந்நிகழ்வில் சிறப்பாக தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும் குடும்பத்தை நல்வழியில் கொண்டு செல்லும் மனைவிக்கு, கணவன் மார்கள் மாலை போட்டு விட்டும் அதே போல மனைவி மார்கள் கணவனுக்கு மாலை போட்டும் உறவுகள் ஒற்றுமையாக வாழ்கை எளிதாக கடந்து செல்ல அன்பை பரிமாறி கொண்டனர்.
இதில் கணவர்கள், மனைவிக்கு மலர் கொடுத்து, மலர் போல மென்மையான வாழ்கையை கடந்து செல்ல வேண்டும் என மலர் அளித்தனர், அதே போல மனைவிகள், கணவனுக்கு கனி கொடுத்து கனிவாக நடந்து கொள்வதாகவும் உறுதி மொழி கூறி கொண்டனர்.
தற்போதைய சூழ்நிலையில் திருமணம் நடந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் சண்டை போட்டு மறு மாதமே நீதிமன்றத்தை நாடி எளிதாக பிரிந்து செல்ல கூடிய தம்பதிகள் தான் அதிகரித்து வருகின்றனர். இதனை மாற்றும் விதமாக இவ்விழா நடைபெற்றது, இதில் இளைய வயது முதல் மூத்த வயது உடைய ஏராளமான தம்பதிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பிள்ளைகள் அனைவரும் கலந்துகொண்டு தாய், தந்தை இருவரின் உறவுகள் எவ்வாறு மேம்பாடு அடைந்துள்ளது என இந்நிகழ்வை நேரில் பார்த்து ஆச்சரியம் அடைந்து மகிழ்ச்சி அடைந்தனர்.