மேலும் அறிய

சீர்காழியில் பரபரப்பு: நகராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து அதிமுகவினர் தர்ணா! பின்னணி என்ன?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி தேர் வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சியில் தேர் ஓடும் நான்கு வீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிவிட்டு மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி, அதிமுகவினர் நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரூ. 2.06 கோடி மதிப்பிலான வடிகால் பணி

சீர்காழி நகராட்சியின் முக்கிய அடையாளமாகத் திகழ்வது சட்டைநாதர் சுவாமி திருக்கோவில். இக்கோவிலைச் சுற்றியுள்ள தேர் வடக்கு வீதி, தெற்கு வீதி, மேல வீதி மற்றும் கீழ வீதி ஆகிய நான்கு வீதிகளும் ஆன்மீக ரீதியாகவும், போக்குவரத்து ரீதியாகவும் மிக முக்கியமானவை. இந்தப் பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கும் பொருட்டு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காகத் தமிழக அரசு சார்பில் ரூ. 2 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான முதற்கட்டப் பணிகள் கடந்த சில வாரங்களாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது வடக்கு வீதியில் பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

அதிமுகவினரின் குற்றச்சாட்டு

இந்நிலையில், அதிமுக நகரக் கழகச் செயலாளர் சுரேஷ் தலைமையில், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திடீரென சீர்காழி நகராட்சி அலுவலகத்திற்குத் திரண்டு வந்தனர். அப்போது கூறுகையில் 

ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும்:

தேர் வடக்கு வீதியில் தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமலேயே வடிகால் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் வடிகால் கால்வாயின் அகலம் குறைந்து, வருங்காலத்தில் மழைநீர் தடையின்றிச் செல்வதில் சிக்கல் ஏற்படும்.

போக்குவரத்து நெரிசல்: ஆக்கிரமிப்புகள் அப்படியே இருப்பதால், தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளால் தேர் வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது.

வார்டு குறைகள்: குறிப்பாக 6 மற்றும் 7-வது வார்டுகளில் கழிவுநீர் முறையாக வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால், அதனைச் சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரிக்கை வைத்து போராட்டத்தில் குதித்தனர்.

அலுவலக வளாகத்தில் தர்ணா

நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, அதிமுக நகரக் கழகச் செயலாளர் சுரேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் ரமாமணி, ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி, நகரப் பொருளாளர் செந்தில்குமார் மற்றும் ஏராளமான தொண்டர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது, நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. "ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அவசர கதியில் பணிகளை மேற்கொள்வது யாருக்காக?" என்ற கேள்விகளையும் அவர்கள் எழுப்பினர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

ஆணையர் உறுதி மற்றும் சமாதானம்

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சீர்காழி நகராட்சி ஆணையர் சசிகுமார் அதிமுக நிர்வாகிகளை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நகரச் செயலாளர் சுரேஷ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனுவை ஆணையரிடம் அளித்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையர் சசிகுமார் கூறியதாவது:

 "தேர் வீதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விரிவான ஆய்வு செய்யப்படும். ஆக்கிரமிப்புகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அவை பாரபட்சமின்றி அகற்றப்படும். பொதுமக்களின் போக்குவரத்திற்கும், மழைநீர் வடிகாலுக்கும் எவ்வித இடையூறும் இன்றி பணிகள் தரமாக நடைபெறுவதை நகராட்சி உறுதி செய்யும். மேலும் 6 மற்றும் 7-வது வார்டுகளில் உள்ள கழிவுநீர் தேக்கப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப் பொறியியல் பிரிவுக்கு உத்தரவிடப்படும்."

ஆணையரின் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட அதிமுகவினர், தங்கள் தர்ணா போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சீர்காழி நகரின் இதயமாக விளங்கும் தேர் வீதிகளில் நடைபெறும் இந்தப் பணிகள் முறையாக முடிக்கப்பட்டால் மட்டுமே, ஆண்டுதோறும் மழைக்காலங்களில் நகர் சந்திக்கும் வெள்ளப் அபாயத்தைத் தவிர்க்க முடியும். அரசியல் கட்சிகளின் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைந்து பணிகளை முடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீளும் குண்டாஸ் பட்டியல்... இதுவரை 67 கைது...!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீளும் குண்டாஸ் பட்டியல்... இதுவரை 67 கைது...!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: சட்ட சிக்கல் தீர்க்கும் சீர்காழி சட்டநாதர் கோயிலில் தஞ்சம் அடைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: சட்ட சிக்கல் தீர்க்கும் சீர்காழி சட்டநாதர் கோயிலில் தஞ்சம் அடைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்!
மயிலாடுதுறையில் கொடூர விபத்து: பொறியியல் கல்லூரி மாணவன் பலி - புதுமணத் தம்பதி உள்ளிட்ட மூவர் கவலைக்கிடம்!
மயிலாடுதுறையில் கொடூர விபத்து: பொறியியல் கல்லூரி மாணவன் பலி - புதுமணத் தம்பதி உள்ளிட்ட மூவர் கவலைக்கிடம்!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Embed widget