மேலும் அறிய

சந்திரபாடி முகத்துவாரத்தில் மணல் கடத்தல்: டிரைவர் ஜெயிலில் அடைப்பு.. தலைமறைவான லாரி ஓனருக்கு போலீஸ் வலைவீச்சு!

மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி மீனவர் கிராம மீன்பிடித்தளப் பகுதியில், அரசு அனுமதியின்றி மணல் கடத்திய டாரஸ் லாரியை பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநரை போலீசார் கைது கைது செய்துள்ளனர்.

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி மீனவர் கிராமத்தில், அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக டாரஸ் லாரியில் மணல் கடத்த முயன்ற சம்பவத்தில், லாரி ஓட்டுநரைப் பொறையார் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டாரஸ் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய லாரி உரிமையாளரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சந்திரபாடி மீன் பிடித்தளப் பணி 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சந்திரபாடி மீனவர் கிராமத்தில், அப்பகுதி மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசின் சார்பில் புதிய மீன் பிடித்தளம் (Fish Landing Centre) அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளின் ஒரு பகுதியாக, நண்டலாறு கடல் பகுதியில் கலக்கும் முக்கிய முகத்துவாரப் பகுதியை ஆழப்படுத்தும் (Dredging) பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு முகத்துவாரத்தை ஆழப்படுத்தியபோது, அங்கிருந்து பல நூறு யூனிட் உயர்தர மணல் எடுக்கப்பட்டது. இவ்வாறு எடுக்கப்படும் மணலை அரசு விதிகளின்படி முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

ஆனால், அங்கே எடுக்கப்பட்ட மணலை, எந்தவிதமான அரசு அனுமதியோ அல்லது உரிய ஆவணங்களோ இல்லாமல், நள்ளிரவு நேரங்களில் பெரிய டாரஸ் லாரிகள் மூலம் கடத்திச் சென்று, வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் அடுத்தடுத்து புகார்கள் எழுந்தன.

நள்ளிரவில் பாய்ந்த போலீஸ் ஆக்ஷன்

இந்த சட்டவிரோத மணல் கடத்தல் குறித்த ரகசியத் தகவல், பொறையார் காவல் நிலையத்திற்குச் சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், பொறையார் காவல் நிலைய ஆய்வாளர் (Inspector) சந்தானமேரி தலைமையிலான போலீசார் அடங்கிய தனிப்படையினர் நேற்று நள்ளிரவு சந்திரபாடி மீனவர் கிராமத்தில் அதிரடி சோதனையிலும், தீவிர கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டனர்.

அப்போது, சந்திரபாடி மீன் பிடித்தளப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகே, சந்தேகத்திற்கு இடமான வகையில் பிரம்மாண்ட டாரஸ் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது. அங்கு சென்று போலீசார் அந்த லாரியை சோதித்தபோது, அதில் நண்டலாறு முகத்துவாரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சுமார் 6 யூனிட் மணல் எவ்வித அரசு அனுமதியும், ரசீதும் இன்றி சட்டவிரோதமாக ஏற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. 

லாரி பறிமுதல்; ஓட்டுநர் அதிரடி கைது

இதனைத் தொடர்ந்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 6 யூனிட் மணலுடன் இருந்த அந்த டாரஸ் லாரியைப் பொறையார் காவல் ஆய்வாளர் சந்தானமேரி தலைமையிலான போலீசார் உடனடியாகப் பறிமுதல் செய்தனர். பின்னர், பலத்த பாதுகாப்புடன் அந்த லாரி பொறையார் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

மேலும், சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக லாரி ஓட்டுநரான வாசுதேவன் என்பவரைப் போலீசார் சம்பவ இடத்திலேயே அதிரடியாகக் கைது செய்தனர். காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அரசு அனுமதியின்றி நள்ளிரவில் மணலைக் கடத்திச் சென்று விற்கத் திட்டமிட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது மணல் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

லாரி உரிமையாளருக்கு வலைவீச்சு

போலீசாரின் தொடர் விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட அந்த டாரஸ் லாரியின் உரிமையாளர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பது தெரியவந்தது. அவரது முழு ஒத்துழைப்பு மற்றும் தூண்டுதலின் பேரிலேயே இந்த நள்ளிரவு மணல் கடத்தல் அரங்கேறியுள்ளது என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர் கலியமூர்த்தி மீதும் பொறையார் போலீசார் முறைப்படி வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரைப் பிடிப்பதற்காகப் போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

"மீனவர் நலனுக்காக அரசு கொண்டு வந்த திட்டத்தில், இப்படி சட்டவிரோதமாக நள்ளிரவில் மணல் கொள்ளை நடப்பது வேதனையளிக்கிறது. லாரி ஓட்டுநரை மட்டும் கைது செய்யாமல், இதன் பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகளையும், அரசு அதிகாரிகளின் உடந்தையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" மேலும், பல லாரிகள் இதுபோன்று மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் காவல்துறையினர் முழுமையாக இந்த மணல் திருட்டை ஒழிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலோரக் கிராமமான சந்திரபாடியில், அரசு திட்டப் பணிகளின் இடத்தில் நள்ளிரவில் டாரஸ் லாரியில் 6 யூனிட் மணல் கடத்த முயன்ற ஊழியர் கைது செய்யப்பட்ட இச்சம்பவம், மயிலாடுதுறை மாவட்டக் கடலோரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டாஸ் சட்டம் பாயும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
Embed widget