மேலும் அறிய

மயிலாடுதுறை வாக்காளர்களே! படிவங்களை சமர்ப்பிக்க கடைசி வாய்ப்பு! தவறவிடாதீர்கள்! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்புப் படிவங்களை திரும்பப் பெறுவதற்கான சிறப்பு முகாம் நவம்பர் 22 மற்றும் 23-ம் தேதி ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்புப் படிவங்களை திரும்பப் பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை (நவம்பர் 22, 2025) சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 23, 2025) ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்களிலும் நடைபெற உள்ளது. இச்சிறப்புப் பணியின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தாங்கள் அளித்த தகவல்களைச் சரிபார்த்து, தங்கள் வாக்குப் பதிவை உறுதி செய்துகொள்ள மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்துள்ளது.

இரண்டு நாட்கள் தொடர் முகாம்

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் தொடர்பான கணக்கெடுப்புப் படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்பப் பெறும் பணிகளில், அந்தந்தப் பகுதிகளின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) முகாமிட்டு தீவிரமாக ஈடுபட உள்ளனர்.

  • நாட்கள்: நவம்பர் 22, 2025 (சனிக்கிழமை) மற்றும் நவம்பர் 23, 2025 (ஞாயிற்றுக்கிழமை).
  • நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

இந்த இரண்டு தினங்களிலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் பொறுப்பில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, ஏற்கனவே வழங்கப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களைச் சேகரிக்க உள்ளனர். இது வாக்காளர்கள் படிவங்களைத் திரும்ப ஒப்படைப்பதற்கு ஒரு அரிய வாய்ப்பை அளிக்கிறது.

பூர்த்தி செய்து ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

மாவட்ட ஆட்சியர் வாக்காளர்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோளில், "வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்புப் படிவங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து தயாராக வைத்திருக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், படிவங்களைப் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது குழப்பங்கள் இருக்குமானால், தங்கள் வீடுகளுக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் நேரிடையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, உடன் அவற்றைப் பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அவர்களிடம் உடனடியாகத் திரும்ப வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வாக்காளர்களின் விவரங்கள் துல்லியமாகப் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வதே இச்சிறப்புத் திருத்தப் பணியின் முக்கிய நோக்கம் என்றும், இதன் மூலம் வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குரிமையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், கேட்டுக்கொண்டுள்ளார்கள். மேலும் விரைந்து படிவங்களை ஒப்படைப்பதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்கள், புகார்கள் அல்லது உதவிகள் குறித்து அறிந்துகொள்ள, மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதி வாரியான தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த எண்களைத் தொடர்புகொண்டு தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்:

  • மாவட்ட அளவில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை - 1950
  • 160. சீர்காழி (தனி) 

வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், சீர்காழி - 04364 – 270222 

161. மயிலாடுதுறை 

வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், மயிலாடுதுறை - 04364 – 222033 

162. பூம்புகார் 

 உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், தரங்கம்பாடி - 04364 - 289439 

இந்த சிறப்பு முகாம் இரண்டு நாட்களுக்கு மட்டும் நடைபெறுவதால், மயிலாடுதுறை மாவட்ட வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, பொறுப்புள்ள குடிமக்களாகத் தங்கள் கடமையை நிறைவேற்றி, தேர்தல் ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
மயிலாடுதுறை விவசாயிகளே ரெடியா? ஜூன் 25-ல் ஆட்சியருடன் நேரடி சந்திப்பு - கோரிக்கைகளை முன்வைக்க அழைப்பு!
மயிலாடுதுறை விவசாயிகளே ரெடியா? ஜூன் 25-ல் ஆட்சியருடன் நேரடி சந்திப்பு - கோரிக்கைகளை முன்வைக்க அழைப்பு!
பகுதிநேர ஆசிரியர்கள் டூ நிரந்தர ஆசிரியர்கள்: 'கொள்கை முடிவு' எடுப்பாரா விஜய்? சட்டமன்றத்தில் எழும் புதிய எதிர்பார்ப்பு!
பகுதிநேர ஆசிரியர்கள் டூ நிரந்தர ஆசிரியர்கள்: 'கொள்கை முடிவு' எடுப்பாரா விஜய்? சட்டமன்றத்தில் எழும் புதிய எதிர்பார்ப்பு!
இலவச சைக்கிள், லேப்டாப், ₹1000 உதவித்தொகை.. நாகை அரசு ITI-ல் சேர அரிய வாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
இலவச சைக்கிள், லேப்டாப், ₹1000 உதவித்தொகை.. நாகை அரசு ITI-ல் சேர அரிய வாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Vaibhav Sooryavanshi: வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
TN By-Election: விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
Tata SUV: EV, CNG, AWD அப்க்ரேட்..! டாடாவின் அட்டகாசமான எஸ்யுவியின் புது வேரியண்ட்கள் - எப்போ? எவ்ளோ?
EV, CNG, AWD அப்க்ரேட்..! டாடாவின் அட்டகாசமான எஸ்யுவியின் புது வேரியண்ட்கள் - எப்போ? எவ்ளோ?
Tamilnadu Round Up: இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
Hyundai Compact EV: மூன்று SUV-க்களிலும் மொக்கை வாங்கிய ஹுண்டாய்..! பஞ்ச்க்கு போட்டியாக புது காம்பேக்ட் EV - தேறுமா?
மூன்று EV-க்களிலும் மொக்கை வாங்கிய ஹுண்டாய்..! பஞ்ச்க்கு போட்டியாக புது காம்பேக்ட் SUV - தேறுமா?
Embed widget