மேலும் அறிய

"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டவும், அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சோழம்பேட்டை கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்திற்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றும், அதற்குப் பின்புறம் உள்ள அரசு நில ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி பெற்றோர்களும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிப்பில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான அங்கன்வாடி மையம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் படித்து, மதிய உணவு உண்டு வருகின்றனர்.

தற்போது இந்த அங்கன்வாடி மையக் கட்டிடம் போதிய பராமரிப்பின்றி மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரைகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுவதுடன், மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே ஒழுகி குளம் போல் தேங்குகிறது. இதனால், எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் குழந்தைகளை மையத்திற்கு அனுப்பவே பெற்றோர்கள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.

"எங்கள் பிள்ளைகளை ஒவ்வொரு நாளும் பயந்துகொண்டேதான் இந்த மையத்திற்கு அனுப்புகிறோம். கட்டிடம் எப்போது விழுமோ என்ற பயம் எங்களை உலுக்குகிறது," என அப்பகுதியைச் சேர்ந்த தாய்மார்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விஷ ஜந்துகளின் புகலிடமான பின்புறப் பகுதி

இந்த மோசமான கட்டிடத்தின் பின்புறம் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் அமைந்துள்ளது. இந்த இடம் நீண்ட நாட்களாகப் பராமரிக்கப்படாததால், அடர்ந்த காடு போலச் செடி, கொடிகள் மண்டிப் போய்க் கிடக்கின்றன. இதன் காரணமாக, அப்பகுதியில் பாம்புகள், தேள்கள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் பெருகி நடமாடுகின்றன.

பல நேரங்களில் இந்த விஷ ஜந்துகள் அங்கன்வாடி மையத்தின் உள்ளேயும், குழந்தைகள் விளையாடும் பகுதியிலும் நுழைந்து விடுவதால், குழந்தைகளின் உயிருக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனிநபர்

பழுதடைந்த கட்டிடத்திற்குப் பதிலாக, அதே பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். புதிய கட்டிடம் கட்டுவதற்குப் பின்புறம் உள்ள அரசுப் புறம்போக்கு நிலமே பொருத்தமானது என அதிகாரிகள் தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டது.

நிலைமை இவ்வாறு இருக்க, அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர், அந்த அரசுப் புறம்போக்கு நிலத்தை அராஜகமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார். நிலத்தைச் சுற்றி வேலி அமைத்தது மட்டுமின்றி, அங்கு ஒரு தகரக் கொட்டகையையும் சட்டவிரோதமாக அமைத்துள்ளார். இதனால் புதிய கட்டிடம் கட்டுவதற்கான வழி முற்றிலும் அடைபட்டுள்ளது.

அதிகாரிகளின் மெத்தனப் போக்கு

இந்த ஆக்கிரமிப்பு குறித்துப் பொதுமக்கள் தரப்பில் வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்குப் புகார்கள் அனுப்பப்பட்டன. புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நிலத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின், ஆக்கிரமிப்பு செய்த நபரிடம் இங்குத் தகரக் கொட்டகை அமைக்கக் கூடாது என்று அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு மட்டும் பிறப்பித்துவிட்டுச் சென்றுள்ளனர். ஆனால், அதிகாரிகள் சென்று பல நாட்களாகியும் ஆக்கிரமிப்பை அகற்ற எவ்விதத் தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கைப் பயன்படுத்திக் கொண்ட அந்தத் தனிநபர், தொடர்ந்து நிலத்தைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளார்.

பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கை

இதுகுறித்து சோழம்பேட்டை கிராம மக்கள் கூறுகையில், "அதிகாரிகள் வாய்மொழியாக எச்சரித்ததோடு தங்கள் கடமை முடிந்தது என நினைத்துவிட்டனர். முறையான எழுத்துப்பூர்வ நடவடிக்கை இல்லாததால் ஆக்கிரமிப்பு இன்னும் அகற்றப்படவில்லை. இதனால் எங்கள் கிராமக் குழந்தைகளின் எதிர்காலமும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும். மேலும், இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டிடத்திற்கு மாற்றாக, அந்த இடத்தில் உடனடியாகப் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தைக் கட்டிக் கொடுக்க வேண்டும்," என்றனர்.

இக்கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றத் தவறினால், குழந்தைகளைத் திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் எச்சரித்துள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன் அரசு விரைந்து செயல்படுமா என்பதைப்பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

"கேக் வேண்டாம்... தங்கச்சி தான் வேணும்!" - 9 வயதுச் சிறுவனின் பிறந்தநாள் கோரிக்கையால் கலங்கிய ஆட்சியர் அலுவலகம்.. 
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget