மேலும் அறிய

"கேக் வேண்டாம்... தங்கச்சி தான் வேணும்!" - 9 வயதுச் சிறுவனின் பிறந்தநாள் கோரிக்கையால் கலங்கிய ஆட்சியர் அலுவலகம்.. 

பெற்றோர் பிரிவால் பிரிக்கப்பட்ட தனது தங்கையைப் பிறந்தநாள் பரிசாகத் தன்னிடம் சேர்த்து வைக்கக் கோரி மயிலாடுதுறையில் 9 வயதுச் சிறுவன் ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் அனைவரையும் கலங்க செய்துள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வழக்கமாக வரும் நிலப் பிரச்சனை, முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் கோரும் மனுக்களுக்கு மத்தியில், அனைவரது கவனத்தையும் ஈர்த்து, நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 

பெற்றோர் இடையேயான குடும்பப் பிரச்சனையால் பிரிந்து சென்ற தனது செல்லத் தங்கையைத் தன்னிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று 9 வயதுச் சிறுவன் அளித்த கண்ணீர் மனு, அங்கு கூடியிருந்த அரசு அதிகாரிகளையும் பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

குடும்பப் பிணக்கால் பிரிந்த உடன்பிறப்புகள்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், தேரழந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஸாத் அலி. இவரது 9 வயது மகன் அல் அப்சார். ஆஸாத் அலிக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, கடந்த மூன்றரை ஆண்டுகளாக இருவருமே தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பெற்றோர் பிரிந்தபோது, 9 வயதுச் சிறுவன் அல் அப்சார் தனது தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வர, அவனது 5 வயதுத் தங்கையை தாய் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார்.

பெற்றோரின் கருத்து வேறுபாடு, எந்தப் பாவமும் அறியாத அந்த பிஞ்சுப் குழந்தைகளின் உலகை முற்றிலும் தலைகீழாக மாற்றிப்போட்டது. பிறந்து சில ஆண்டுகளிலேயே தனக்குக் கிடைத்த அன்புச் செல்வமான தங்கையைப் பிரிந்த சிறுவன் அல் அப்சார், கடந்த மூன்றரை ஆண்டுகளாகத் தனது தங்கையைக் காண்பதற்காக ஏங்கித் தவித்துள்ளான்.

தங்கையைப் பார்க்க விடுக்கப்பட்ட தடைகள்

ஒன்றாக விளையாட வேண்டிய வயதில், உடன் பிறந்த தங்கையைப் பார்க்க முடியாமல் தவித்த சிறுவன், பலமுறை தனது தாயிடம் தங்கை அல்ஃபியாவைப் பார்க்க முயற்சி செய்துள்ளான். ஆனால், குடும்பப் பகை மற்றும் பெற்றோரின் கோபம் காரணமாக, தாயார் அந்தச் சிறுவனைத் தங்கையைச் சந்திக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தான் நேசிக்கும் தங்கை அருகில் இருந்தும், அவளைத் தொட்டுப் பேசவோ, அவளோடு விளையாடவோ முடியாமல் போனது அந்தச் சிறுவனின் பிஞ்சு மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியது. "பெற்றோர்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம், அதற்காக உடன் பிறந்த தங்கையை என்னிடமிருந்து பிரிப்பது நியாயமா?" என்ற கேள்வி அந்தச் சிறுவனின் மனதை ஆழமாகப் பாதித்துள்ளது.

பிறந்தநாள் பரிசாகக் கேட்ட பாசம்

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்குத் தனது தந்தையுடன் வந்த சிறுவன் அல் அப்சார், நேராக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து ஒரு மனுவை அளித்தான். அதில், பள்ளிக்குச் செல்வது, மாலையில் விளையாடுவது என அனைத்து தருணங்களிலும் தனது தங்கையுடன் சேர்ந்து வாழவே தான் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளான்.

மேலும், வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரவுள்ள தனது பிறந்தநாளுக்கு எந்தப் பொருளும் வேண்டாம் என்றும், பெற்றோர் மனக்கசப்பால் பிரிந்து வாழும் தனது அன்புத் தங்கையைத் தன்னிடம் சேர்த்து வைப்பதே தனக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பிறந்தநாள் பரிசு என்றும் அந்த மனுவில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளான்.

கண்கலங்கிய ஆட்சியர் அலுவலகம்

சிறுவன் அல் அப்சார் அளித்த மனுவைப் படித்த அதிகாரிகள்  அனைவரும் ஒரு கணம் உறைந்து போயினர். பெற்றோர்களின் கோபத்தாலும் பிடிவாதத்தாலும் இடையே நசுங்கிப் போகும் குழந்தைகளின் பாசப் போராட்டத்தைக் கண்டு, அங்கு மனு அளிக்க வந்திருந்த பொதுமக்கள் பலரும் கண்கலங்கினர். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட அதிகாரிகள், இந்த விவகாரம் குறித்துச் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் உரிய விசாரணை நடத்தி, சட்டப்பூர்வ நடவடிக்கைகளின்படி சிறுவனுக்கு அவனது தங்கையைச் சந்திக்க வைப்பதற்கான அல்லது உடன்பிறந்தவர்களின் பாசம் தடைபடாமல் இருக்க வழிவகை செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.

பெற்றோர் சண்டையால் பிரிந்த தங்கையை, தனது பிறந்தநாள் பரிசாகக் கேட்கும் 9 வயதுச் சிறுவனின் இந்த பாசக் போராட்டம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

"கேக் வேண்டாம்... தங்கச்சி தான் வேணும்!" - 9 வயதுச் சிறுவனின் பிறந்தநாள் கோரிக்கையால் கலங்கிய ஆட்சியர் அலுவலகம்.. 
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget