மேலும் அறிய

"மணிமேகலை விருது" ரூ.5 லட்சம் பரிசு தொகை..! விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி...!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறந்து விளங்கும் மகளிர் குழுக்கள் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2024-25 ஆண்டிற்கான மணிமேகலை விருதுக்கு தகுதியான குழுக்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;

மணிமேகலை விருது 

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புற பகுதியில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 2024-25 ஆம் ஆண்டு மாநில மற்றும் மாவட்ட அளவிலான சிறந்த சமுதாய அமைப்புகளை மணிமேகலை விருதிற்கு தேர்வு செய்திட 17.04.2025 முதல் 02.05.2025 வரை 16 நாட்கள் மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது.

5 லட்சம் ரூபாய் பரிசு

எனவே தகுதியான சமுதாய அமைப்புகளின் விண்ணப்பித்தினை தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில் அளித்திட வேண்டும் எனவும், அதன்படி தகுதியான சமுதாய அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் பரிந்துரைக்கப்படவுள்ளது. மேலும் மணிமேகலை விருதிற்கு பரிந்துரைக்கப்படும் சமுதாய அமைப்புகளுக்கு தகுதியின் அடிப்படையில் மாநில அளவில் தேர்வு செய்யப்படும் வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கு 5 லட்சம் ரூபாய், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு 3 லட்சம் ரூபாய், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதமும், நகர்ப்புற பகுதிகளுக்கு பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு 3 லட்சம் ரூபாய், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய், மாவட்ட அளவில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ஒரு லட்சம் ரூபாய், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு 50 ஆயிரம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், நகரப் பகுதிகளை சேர்ந்த பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு 1 லட்சமும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூபாய் 25 ஆயிரமும் மணிமேகலை விருதிற்கு வழங்கப்படவுள்ளது.

விருதின் நோக்கம் 

இந்த விருது, ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு சமூக மாற்றத்தை உருவாக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் (SHG), ஊராட்சி மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புற பகுதி சமுதாய அமைப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் வழங்கப்படுகிறது.

 

விண்ணப்பிக்கத் தகுதியுடைய அமைப்புகள்

 

  • ஊரக மகளிர் சுய உதவிக்குழுக்கள்

 

  • நகர்ப்புற மகளிர் சுய உதவிக்குழுக்கள்

 

  • ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள்

 

  • வட்டார அளவிலான கூட்டமைப்புகள்

 

  • கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள்

 

  • நகர்ப்புற பகுதி அளவிலான கூட்டமைப்புகள்

 

விருதிற்கான பரிசுத் தொகை அமைப்புகளின் வகையின்படி பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

 

மாநில அளவில்:

 

  • வட்டார அளவிலான கூட்டமைப்புகள் – 5,00,000 ரூபாய்

 

  • ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் – 3,00,000 ரூபாய் 

 

  • கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் – 1,00,000 ரூபாய் 

 

  • மகளிர் சுய உதவிக்குழுக்கள் – 1,00,000 ரூபாய் 

 

  • நகர்ப்புற பகுதி அளவிலான கூட்டமைப்புகள் – 3,00,000 ரூபாய் 

 

  • நகர்ப்புற மகளிர் சுய உதவிக்குழுக்கள் – 1,00,000 ரூபாய் 

மாவட்ட அளவில்:

 

  • ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் – 1,00,000 ரூபாய் 

 

  • கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் – 50,000 ரூபாய் 

 

  • மகளிர் சுய உதவிக்குழுக்கள் – 25,000 ரூபாய் 

 

  • நகர்ப்புற பகுதி அளவிலான கூட்டமைப்புகள் – 1,00,000 ரூபாய் 

 

  • நகர்ப்புற மகளிர் சுய உதவிக்குழுக்கள் – 25,000 ரூபாய் 

 

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய அமைப்புகள் தங்களது விண்ணப்பங்களை தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வழங்கலாம். மேலும் விபரங்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
Embed widget