மேலும் அறிய

கொடிகம்பம் நடுவதில் பிரச்னை - போலீஸ் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி இளைஞர் தீக்குளிப்பு

’’சொந்த செலவில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி கொடியை தான் ஊன்றி வைத்ததாகவும் அதனை அகற்றி அகில இந்திய பார்வர்டு பிளாக்  கட்சியின் கொடியை நடுவதற்கு சென்றபோது இரு தரப்பினரிடையே தகராறு’’

தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஏகலூத்து சாலையில் வசித்து வரும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகி சிலம்பரசனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் கம்பம் பகுதியில் காளவாசலில் வேலை செய்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது உறவினர்களுடன் ஏற்பட்ட இடப் பிரச்சினை சம்பந்தமாக தன்னை சிலர் தாக்கியதாக கூறி கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் சிலம்பரசன் புகார் அளித்திருந்தார்.

கொடிகம்பம் நடுவதில் பிரச்னை - போலீஸ் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி இளைஞர் தீக்குளிப்பு

காவல் நிலையத்திற்கு செல்ல தனக்கு உதவியாக இருப்பதற்கு தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த சிலரை அழைத்து சென்றபோது அவர்களுக்கும் சிலம்பரசனுக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் சிலம்பரசன் அந்த கட்சியில் இருந்து விலகி தேனி மாவட்டத்தில் இருக்கும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் சேர்ந்ததாக  கூறப்படுகிறது. இந்நிலையில் தனது வீட்டின் அருகே தன் சொந்த செலவில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் கொடியை தான் ஊன்றி வைத்ததாகவும் அதனை அகற்றிவிட்டு அகில இந்திய பார்வர்டு பிளாக்  கட்சியின் கொடியை நடுவதற்கு சென்றபோது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கொடிகம்பம் நடுவதில் பிரச்னை - போலீஸ் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி இளைஞர் தீக்குளிப்பு

இந்த கொடிக்கம்ப பிரச்சனையை போலீசார்   விசாரணை   செய்தபோது சிலம்பரசனுக்கு எதிராக கம்பம் தெற்கு காவல்    ஆய்வாளர்   லாவண்யா    செயல்பட்டதாக கூறி  கடந்த 31 ஆம் தேதி  வீட்டில் அருகிலேயே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த காயமடைந்த சிலம்பரசன் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொடிகம்பம் நடுவதில் பிரச்னை - போலீஸ் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி இளைஞர் தீக்குளிப்பு

கடுமையான தீ காயம் ஏற்பட்ட நிலையில் தனது இறப்புக்கு கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் காரணம் எனக் கூறி பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில்   வேகமாக பரவிய நிலையில் கடந்த 4 நாட்களுக்கு பிறகு சிலம்பரசன் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட தெற்கு காவல் நிலைய போலிசாரிடம் கேட்டபோது சிலம்பரசன் குடி வெறியில் தீ வைத்துக்கொண்டதாகவும் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும் கூறினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்டாக், மத்திய அரசு பதிலடி, சரித்திரம் படைத்த குரோக்கா  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்டாக், மத்திய அரசு பதிலடி, சரித்திரம் படைத்த குரோக்கா - 11 மணி வரை இன்று
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Embed widget