குப்பையோடு குப்பையாக கிடக்கும் தமிழ் அன்னை படகு! முல்லை பெரியாறு தேக்கடி ஏரியில் இயக்கப்படுமா?
10 ஆண்டுகளாக தமிழக அரசு மற்றம் அதிகாரிகளால் தமிழ் அன்னை படகை இயக்க அனுமதி பெறமுடியாததால் தேக்கடி ஏரிப்பகுதியின் ஒரு மூலையில் தமிழன்னை தற்போது குப்பையோடு குப்பையாக கிடக்கிறது.
முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்கும் பொறுப்பு தொடக்கத்தில் தமிழகத்திடம் இருந்தது. 1982 முதல் பெரியாறு அணை பாதுகாப்பில் கேரள போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கவேண்டும் என தமிழகம் தெரிவித்தபோதும், மத்திய பாதுகாப்பு படை தேவையில்லை என்ற கேரள அரசு 124 பேர் கொண்ட தங்களுடைய போலீசாரை நியமித்தது. இந்த நிலையில் அவர்களுக்கான காவல்நிலையம் அணைப்பகுதியில் உள்ளது.
இதில் சுமார் 60 பேர்கள் வரை தற்போது மாற்றுப்பணியாக வள்ளக்கடவு, வண்டிப்பெரியார் காவல்நிலையங்களில் பணியில் உள்ளனர். இவர்கள் முல்லை பெரியாறு அணைக்கு சென்று வர கேரள பெரியார் புலிகள் காப்பக வனத்துறை சார்பில் ஏற்கனவே படகுகள் விடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அதி விரைவு படகு ஒன்றும் இயக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட தமிழன்னை படகு இது வரையில் இயக்கப்பட்டாமல் இருந்து வருகிறது.
தமிழன்னையின் கதை
கேரள மாநிலம் தேக்கடி நீர்தேக்கத்தில் நான்கு படகுகளை இயக்க தமிழக பொதுப்பணித்துறைக்கு அனுமதி உள்ளது. தொடக்கத்தில் வைகை ராணி, புளூபெல் என்ற படகுகள் பயன்பாட்டில் இருந்தது. 1982ல் கண்ணகி, 1984 ல் ஜலரத்னா என இரண்டு படகுகளையும் தமிழக பொதுப்பணித்துறை இயக்கியது. பின்னர் நாட்கள் செல்லச்செல்ல அணைப்பகுதிக்கு தமிழக அதிகாரிகள் செல்வது குறைந்ததால், வைகை ராணி, புளூபெல் இரண்டு படகுகளும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2014ல் ஒரு கோடி ரூபாய் செலவில் 27 பேர்கள் அமர்ந்து செல்லக்கூடிய 200 எச்பி (குதிரைத்திறன் இழுவிசை)யும் இரட்டை எஞ்சினும் கொண்ட ஸ்டீல் படகினை தமிழக பொதுப்பணித்துறை வாங்கியது. முதலில் இந்த படகுக்கு டி.என். பி.டபிள்யூ.டி 1 என்று பேர்வைக்கப்பட்டது. பின்னர் தமிழ் அன்னை என பெயர் மாற்றப்பட்டது. கேரள ஐலேண்டு வெசல்ஸ் ஆக்ட் நடைமுறைப்படிதான் புதிய படகு வடிவமைக்கப்பட்டள்ளது.
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
புதிய படகிற்கு கடந்த 2015 தொடக்கத்திலேயே ஐ.ஆர்.எஸ் (இந்தியன் ரெஜிஸ்ட்ரி ஆப் ஷிப்பிங்) சர்வேயர் மற்றும் படகு ஆய்வாளரின் பிட்னஸ் சான்று பெற்றிருந்தும், கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசு மற்றம் அதிகாரிகளால் அந்த படகை இயக்க அனுமதி பெறமுடியாததால் தேக்கடி ஏரிப்பகுதியின் ஒரு மூலையில் தமிழன்னை தற்போது குப்பையோடு குப்பையாக கிடக்கிறது. புதிய படகினை இயக்க அனுமதி தராமல், பல்வேறு குறைகளைக் கூறிவரும் கேரள வனத்துறை தற்போது கேரள போலீசாரின் படகுக்கு உடனே அனுமதியளித்தது எப்படி? இது கண்டிக்கத்தக்கது, தமிழக அரசு இதில்கவனம் செலுத்தவேண்டும்.