மேலும் அறிய

ஒரு பஸ் ஸ்டாண்டு கட்றதுல இவ்வுளவு குழப்பமா?- வேதனையில் குமுளி மக்கள்...!

தமிழக-கேரள எல்லையான குமுளியில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த 11 ஆண்டு காலமாக முடங்கிக் கிடக்கும் நிலையில் தமிழக அரசுத்துறைகளுக்குள்ளாகவே பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன

தமிழக-கேரள மாநிலங்களின் எல்லையாக விளங்கும் தேனி மாவட்டம் குமுளியில் எல்லையாக குமுளி உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், புதுவை, சென்னை, பெங்களூரு போன்ற வெளிமாநிலங்களுக்கும் தினமும் 100-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  

ஒரு பஸ் ஸ்டாண்டு கட்றதுல இவ்வுளவு குழப்பமா?- வேதனையில் குமுளி மக்கள்...!

தமிழக எல்லையான குமுளியில், 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒரு பணிமனை அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது குமுளி மலைப்பகுதியில் பேருந்து நிலையம் இல்லாத நிலையில் உள்ளது. பேருந்து நிலையம் அமைக்கப்படாததால், குமுளிக்கு வரும் பேருந்துகள்  மலைச் சாலையின் இருபுறமும் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இதர வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குமுளி மலைப் பகுதியில் ஒரு பேருந்து நிலையம் உள்ளது. ஆனால் அது கேரள மாநிலத்திற்கு சொந்தமான பேருந்து நிலையமாகும். கேரள மாநில பேருந்து நிலையத்தில் கடைகள், கழிப்பறை வசதி, பேருந்து நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளும் உள்ளது. ஆனால் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில், தமிழக குமுளி பகுதியில் ஒரு பேருந்து நிலையம் வேண்டும் என்ற  கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் கடந்த 11 ஆண்டு காலமாக வைக்கப்பட்டு வருகிறது.

ஒரு பஸ் ஸ்டாண்டு கட்றதுல இவ்வுளவு குழப்பமா?- வேதனையில் குமுளி மக்கள்...!

இது போன்ற பிரச்னைகளைப் போக்க, பயணிகளின் கோரிக்கையின் அடிப்படையில், குமுளியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை பேருந்து நிலையமாக மாற்றவும், அங்குள்ள பணிமனையை லோயா்கேம்பில் அமைக்கவும் மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது. புதிய பணிமனை அமைக்க லோயா்கேம்பில் மின்சார வாரியத்துக்கு சொந்தமான 3.87 ஏக்கா் அளவிலான நிலம் தோ்வு செய்யப்பட்டது. கட்டுமானப் பணிகளுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து ஒரு கோடி ஒதுக்கப்பட்டது. அதற்கான கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின்னா் கடந்த 2015ஆம் ஆண்டு குமுளியில் உள்ள பணிமனை, லோயா்கேம்புக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து தமிழக எல்லையிலுள்ள குமுளி பணிமனையை, பேருந்து நிலையமாக மாற்றி, பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்ய கூடலூா் நகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. ஆனால் பணிமனை இடத்திற்கும், அங்குள்ள கட்டடத்திற்குமான தொகையை கணக்கிட்டு கேட்டு, இடத்தை ஒப்படைக்க மறுத்தது போக்குவரத்துத்துறை. இதனால் கூடலூா் நகராட்சி நிா்வாகம் பேருந்து நிலையம் கட்டும் திட்டத்தை கிடப்பில் போட்டது.

ஒரு பஸ் ஸ்டாண்டு கட்றதுல இவ்வுளவு குழப்பமா?- வேதனையில் குமுளி மக்கள்...!

இதற்கிடையில் குமுளி பேருந்து நிலையம் அமைந்துள்ள இடம், கூடலூா் வனச்சரக பகுதிக்குள் வருவதாலும், புலிகள் காப்பக நிா்வாகத்தில் இருப்பதாலும், கட்டுமானப் பணிகளுக்குத் தடை இருப்பதாக வனத்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், "அரசு போக்குவரத்து கழகத்திற்கு நீண்டகால குத்தகை அடிப்படையிலேயே வனத்துறை நிலத்தை வழங்கியது. ஆனால் அவா்கள் பணம் செலுத்த வில்லை. இதனால் மீண்டும் வனத்துறையினரிடம் அந்த இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுவிட்டது " என்றாா்.

ஒரு பஸ் ஸ்டாண்டு கட்றதுல இவ்வுளவு குழப்பமா?- வேதனையில் குமுளி மக்கள்...!

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில் , " கழிப்பறை, குடிநீர், நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர். மழைக் காலங்களில் பயணிகள் நனைந்து கொண்டே பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் அவல நிலையில் உள்ளது, குமுளி பேருந்து நிலையம். மேலும்  விவசாயிகள், தொழிலாளா்கள், சுற்றுலாப் பயணிகள், ஐய்யப்ப பக்தா்கள் ஆகியோா் வந்து செல்லும் பகுதி என்பதால், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு பிரச்னைகளுக்கு தீா்வு கண்டு பேருந்து நிலையம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget