மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source:  Poll of Polls)

Budget 2024 Expectations: இடைக்கால பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்? பொருளாதார நிபுணர் பேட்டி

"இந்தியா பெரிய வளர்ச்சி, முதலீடு முன்னேற்றம் போன்றவற்றில் தற்போது வரை தன்னிறைவு அடையாமல் தான் உள்ளது" - அது தொடர்பாக பட்ஜெட்டில் கவனம் தேவை என்றார்.

Budget 2024 

பிப்ரவரி 1 ஆம் தேதி, அதாவது நாளை வியாழக்கிழமை, 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டானது புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இடைக்கால வரவுசெலவுத் திட்டத்திற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் நிறைவு செய்துள்ளது.

பட்ஜெட்டுக்கு முன் நடத்தப்படும் அல்வா விழாவும் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த பட்ஜெட் மோடி அரசின் இரண்டாவது பதவிக்காலத்தின் கடைசி பட்ஜெட் என்பதால் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதன் பிறகு புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

எதிர்பார்ப்பு:

2024-க்கான முதல் பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள நிலையில் அதன் எதிர்பார்ப்பு குறித்து பேராசிரியர் முனைவர். சி.முத்துராஜா , மதுரை அமெரிக்கன் கல்லூரி தலைவர், பொருளாதாரத்துறை தலைவர் தெரிவித்தது,” இந்தியாவில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு பணிகளை சில வருடமாக செய்து வந்தாலும் போதிய அளவு இல்லை. எனவே அது தொடர்பாக பட்ஜெட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதேபோல் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்டில் முக்கியத்துவம் இருக்குமென நினைக்கிறேன். இதனை எந்தெந்த துறையில் வழங்க முடியும் என திட்டமிட்டு செயல்படுவதற்கான முயற்சி இருக்கலாம். அது தொடர்பாகவும் பட்ஜெட்டில் திட்டம் இருக்கலாம்.
 
union Budget 2024 Finance Minister Nirmala Sitharaman date and time when full details here Budget 2024 Date and Time: இடைக்கால பட்ஜெட் எப்போது, ​​எந்த நேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது..? முழு விவரம் உள்ளே!

 பெண்கள் முன்னேற்றம்:

தற்போது மத்தியில் ஆளுகின்ற அரசு 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலும் பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை போதுமான அளவில் வழங்கவில்லை. அதனால் பெண்களும் பெண் குழந்தைகள் சார்ந்த  முன்னேற்றத்திற்கான திட்டங்களை போதுமான அளவு வகுக்க வேண்டும். அதேபோல் தேர்தல் பொருளாதாரம் என சொல்லப்படும் சில திட்டங்கள் எல்லோருக்கும் இன்னும் கிடைக்கவில்லை. ஊரக மேம்பாடு, கிராமப்புற மேம்பாடு அதனை அதிகளவு செய்ய வேண்டும். இதனால் பெரும்பான்மையானோர் பயனடைய வாய்ப்புள்ளது. புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதில் உயர்கல்வி சார்ந்த நிறுவனங்களை மேம்படுத்துதல் மாணவர்கள் முன்னேற்றத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்டவைகளை செய்யலாம்.
 
Budget 2024 Expectations: இடைக்கால பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்? பொருளாதார நிபுணர் பேட்டி

சிறு, குறு தொழில்கள்:

சிறு குறு தொழில்கள், ஸ்டார்ட் அப் தொழில்களுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பட்ஜெட்டில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இளைஞர்கள், மாணவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை கவரும் வண்ணம் திட்டங்கள் இருக்கலாம். தேர்தல் நெருங்கும் வேலை என்பதனால் இது போன்ற பெரும்பான்மையான இருக்கும் நபர்களுக்கான திட்டம் இருக்கலாம்.  கவரும் திட்டங்களையும் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது.
 
அதேபோல் தேர்தலை முன்னிட்டு வரி மாற்றம் குறித்த திட்டம் இருக்கலாம். வருமான வரி, சொத்துவரி என பல்வேறு வரிகளில் இருந்து சிறிய மாற்றங்கள் இருக்கலாம். அவர்களால் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்த முடியவில்லை என்றாலும், தேர்தலுக்காக இதை மாற்றினோம், இதை செய்தோம் என உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சில மாற்றங்களை வரி சார்ந்து அதன் விதிவிலக்குகள் அல்லது குறைப்புகள் நடக்கலாம். அதனால் பசுமை பொருளாதாரம் பெண்கள் சார்ந்த முன்னேற்றம் தொழில் நிர்வாகம் வரிசுமை குறைப்பு இது போன்ற விஷயங்கள் அதிக அளவு இருக்க வாய்ப்புள்ளது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்தியா பெரிய வளர்ச்சி, முதலீடு முன்னேற்றம் போன்றவற்றில் தற்போது வரை தன்னிறைவு அடையாமல் தான் உள்ளது. இதனால் அதற்கான முயற்சிகள் சார்ந்து வரும் பட்ஜெட்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட்: ஆளுநர் மாளிகை அதிரடி உத்தரவு
தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட்: ஆளுநர் மாளிகை அதிரடி உத்தரவு
Home Loan: வீட்டு கடன் வாங்க திட்டமா?  இந்த ஆவணம் கையில் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன? விவரம் இதோ..!
Home Loan: வீட்டு கடன் வாங்க திட்டமா? இந்த ஆவணம் கையில் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன? விவரம் இதோ..!
Adani: அச்சச்சோ..! கைதாகிறாரா மோடியின் நண்பர் கவுதம் அதானி - ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக பிடிவாரண்ட்
Adani: அச்சச்சோ..! கைதாகிறாரா மோடியின் நண்பர் கவுதம் அதானி - ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக பிடிவாரண்ட்
Vidaamuyarchi: சபரிமலையில் விடாமுயற்சி டீசர் கேட்ட AK பாய்ஸ்! அஜித் ரசிகர்கள் அட்டகாசம்!
Vidaamuyarchi: சபரிமலையில் விடாமுயற்சி டீசர் கேட்ட AK பாய்ஸ்! அஜித் ரசிகர்கள் அட்டகாசம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Maharashtra Elections Exit Poll Results : ஆட்சியை தக்கவைக்கும் பாஜக?சோகத்தில் ராகுல் காந்தி!Jharkhand Elections Exit Poll Results : அரியணை ஏறும் பாஜக?சரிவை சந்திக்கும் ராகுல்!Hosur Lawyer Murder | நடுரோட்டில் பயங்கரம்!ஓசூர் வழக்கறிஞர் படுகொலை! விரட்டி விரட்டி வெட்டிய வாலிபன்AR Rahman Divorce |‘’நானும் கணவரை பிரிகிறேன்!’’AR ரஹ்மான் GUITARIST பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட்: ஆளுநர் மாளிகை அதிரடி உத்தரவு
தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட்: ஆளுநர் மாளிகை அதிரடி உத்தரவு
Home Loan: வீட்டு கடன் வாங்க திட்டமா?  இந்த ஆவணம் கையில் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன? விவரம் இதோ..!
Home Loan: வீட்டு கடன் வாங்க திட்டமா? இந்த ஆவணம் கையில் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன? விவரம் இதோ..!
Adani: அச்சச்சோ..! கைதாகிறாரா மோடியின் நண்பர் கவுதம் அதானி - ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக பிடிவாரண்ட்
Adani: அச்சச்சோ..! கைதாகிறாரா மோடியின் நண்பர் கவுதம் அதானி - ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக பிடிவாரண்ட்
Vidaamuyarchi: சபரிமலையில் விடாமுயற்சி டீசர் கேட்ட AK பாய்ஸ்! அஜித் ரசிகர்கள் அட்டகாசம்!
Vidaamuyarchi: சபரிமலையில் விடாமுயற்சி டீசர் கேட்ட AK பாய்ஸ்! அஜித் ரசிகர்கள் அட்டகாசம்!
TN Rain: ரைட்டு..! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: ரைட்டு..! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - சென்னை வானிலை மையம் அறிக்கை
Sabarimala: சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா? செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்!
Sabarimala: சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா? செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்!
Salary Gk: ராணுவம் Vs துணை ராணுவம் Vs காவல்துறை - எதில் அதிக ஊதியம் கிடைக்கும்? விவரம் இதோ..!
Salary Gk: ராணுவம் Vs துணை ராணுவம் Vs காவல்துறை - எதில் அதிக ஊதியம் கிடைக்கும்? விவரம் இதோ..!
அக்கிரமம்! நண்பர்களுடன் சேர்ந்து சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன்!
அக்கிரமம்! நண்பர்களுடன் சேர்ந்து சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன்!
Embed widget