மேலும் அறிய

கஜ பூஜைக்கு என அனுமதி பெறப்பட்ட யானைகள் அமைச்சரின் மகன் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்டதா? 

கோடி கோடியாக பணத்தை கொட்டி சாப்பாடு என சர்ச்சைக்கு ஆளான அமைச்சரின் திருமணத்திற்கு யானைகள் கொண்டுவரப்பட்டதும் சர்ச்சையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான பி. மூர்த்தியின் மூத்த மகனான தியானேஷின் திருமண விழா  மிகப்பிரம்மாண்டமாக  மதுரையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் தொல்.திருமாவளவன்,  உதயநிதி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இந்த திருமண விழாவிற்காக பல கோடி ரூபாய் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விழாவில் முதல்வரை வரவேற்கும் வகையில் கேரளாவில் இருந்து சாது மற்றும் நாராயண குட்டி என்ற 2 ஆண் யானைகள் வரவழைக்கப்பட்டு நுழைவுவாயில் முழுவதும் கரும்பு மற்றும் வாழையால் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.

கஜ பூஜைக்கு என அனுமதி பெறப்பட்ட யானைகள் அமைச்சரின் மகன் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்டதா? 
தனியார் விழாக்களில் யானைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் அமைச்சரின் மகன் திருமணவிழாவிற்கு யானை எப்படி கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாக சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுள்ள கேள்வியில் வளர்ப்பு யானைகள் திருமண நிகழ்வில் பங்கேற்க அனுமதி உண்டா என்ற கேள்விக்கு அனுமதி இல்லை என வனத்துறை சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மதுரை மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களில் இருந்து கடந்த"2022 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 2022 செப்டம்பர் 15 ஆம் தேதி வரை வளர்ப்பு யானைகள் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு
கேரளா மாநிலத்தில் இருந்து, மதுரைக்கு இரண்டு யானைகள் கஜபூஜைக்கு கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டது எனவும் பதில் அளித்துள்ளனர்.

கஜ பூஜைக்கு என அனுமதி பெறப்பட்ட யானைகள் அமைச்சரின் மகன் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்டதா? 
 
மேலும் மதுரையில் 9.9.2022-ம் தேதி நடைபெற்ற திருமண விழாவிற்காக கேரளாவில் கொண்டுவரப்பட்ட யானைகளை கண்காணிக்க மதுரை வன சரகம் சார்பாக நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் பெயர் மற்றும் பதவி விவரங்களை தகவலாக தரவும் என்ற கேள்விக்கு மதுரை வனக்கோட்ட வன உயிரினசரக வனச்சரக அலுவலர் என பதில் அளித்துள்ளனர். இந்த தகவல் அறியும் உரிமை சட்ட கேள்விக்கான பதிலில் இரு யானைகள் கேரளாவில் இருந்து கஜபூஜைக்கு கொண்டு வந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் செப்-9ம் தேதி திருமண விழாவில் பங்கேற்ற யானைகள் கண்காணிக்கப்பட அதிகாரிகள் குறித்து கேள்விக்கும் பதில் அளித்துள்ளனர். இந்த நிலையில் திருமண விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சரை வரவேற்பதற்காக கஜபூஜை என்ற பெயரில் கேரளாவில் இருந்து யானைகள் அழைத்து வரப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் அமைச்சரின் மகன் திருமணவிழாவில் எந்த அடிப்படையில் திருமண விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

கஜ பூஜைக்கு என அனுமதி பெறப்பட்ட யானைகள் அமைச்சரின் மகன் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்டதா? 
 
கஜ பூஜை என்ற பெயரில் கேரள வனத்துறையும் ஏமாற்றி 2 யானைகளை தமிழகத்திற்கு அழைத்து வந்து சட்டவிரோதமாக தமிழக முதலமைச்சர் பங்கேற்ற திருமண விழாவில் பயன்படுத்தப்பட்டதா? கேரளா அரசை மட்டுமல்லாமல் தமிழக அரசையும் ஏமாற்றி கஜ பூஜைக்காக கொண்டுவரப்பட்ட யானைகள் எங்கே சென்றது என்ற பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 20ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட திருமணம் ஏற்பாடு கோடி கோடியாக பணத்தை கொட்டி சாப்பாடு என சர்ச்சைக்கு ஆளான அமைச்சரின் திருமணத்திற்கு யானைகள் கொண்டுவரப்பட்டதும் சர்ச்சையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
Embed widget