'பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ விநாயகர் சிலைக்கு தடை - மேல்முறை மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
Vinayagar Chaturthi 2023 'பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு தடை விதித்துள்ளது.
'பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு தடை விதித்துள்ளது.
'பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ என மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்யலாம் என தனிநீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவை எதிர்த்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சார்பில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது.
இந்த வழக்கு உயர்ந்தீமன்ற மதுரை கிளையில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ மூலப்பொருட்கள் கொண்டு விநாயகர் சிலைகளை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் திருநெல்வேலியில் உள்ள பாளயங்கோட்டையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். இதற்கு எதிராக பிரகாஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த தனிநீதிபதி ஜி.சுவாமிநாதன் 'பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ மூலக்கூறு மூலம் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது ஆனால், அவற்றை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்க முடியாது எனக் கூறி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
'பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது மற்றும் மத்திய அரசு விதித்துள்ள சுற்றுச்சூழலுக்கு எதிரானது என்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திக்கேயன் மனு தாக்கல் செய்திருந்தார். விநாயகர் சிலை மண்ணால் ஆனதாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு அவசர வழக்காக விடுமுறை நாளான இன்று, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், "ஒன்றிய அரசின் மாசு கட்டுபாட்டு வாரிய விதிமுறைகளுக்கு எதிராக மனு தாரர் விநாயகர் சிலைகளை தயாரித்துள்ளார். மேலும் சிலைகள் தயாரிப்பதற்காக எந்தவித அனுமதியையும் உள்ளட்சி நிர்வாகத்திடம் மனுதாரர் வாங்க வில்லை. என்று வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் முலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது என்று, ஏற்கெனவே பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான் ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதிமுறைகளை வகுத்துள்ளது. அவற்றை ஏன் சிலை தயாரிப்பாளர்கள் பின்பற்றுவதில்லை?
15 ஆண்டுகளுக்கு முன்பே நச்சு பொருட்கள் கலந்து சிலைகள் செய்யக்கூடாது என நீதிமன்ற உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை? மேலும், ரசாயனம் கலந்த சிலைகளை நீர் நிலைகளில் கலப்பதால் புற்று நோய் அதிக அளவில் ஏற்படுகிறது. விஷம் என்பதில் ஒரு துளி விஷம், அதிகம் என்பதெல்லாம் இல்லை எல்லாமே விஷம் தான். அமோனியம், மெர்குரி போன்று பிளாஸ்டர் ஆப் பாரிஸும் நச்சு பொருள்தான். எனவே, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் முலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்யலாம் என தனி நீதிபதி பிறப்பத்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டனர். அதோடு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்களை கொண்டு சிலை தயாரிக்க கூடாது என்றும் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
’பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ கொண்டு தயாரிகக்ப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என உயர்நீதிமன்அ மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்த இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பில் தலையிட முடியாது. பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது என்பது சரியே என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'பொது நீர்நிலைகளில் ரசாயனம் கலந்த சிலைகள் கரைக்க அனுமதிக்க முடியாது என்பது சரியானதுதான்' என கருத்து தெரிவித்து மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், விநாயகர் சிலைகள் தொடர்பான விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது.