மேலும் அறிய

விஜய் ஆண்டனி, பிரசாந்த் தொடங்கி வைத்த அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை: மதுரைக்கு புதிய மைல்கல்!

வெளிநாடுகளில் மட்டுமே பயன்படுத்தி வந்த இது போன்ற கருவிகள் தற்போது நம் மாநிலத்திலும் அதுவும் மதுரையில் பயன்படுத்தப்பட உள்ளது ஒரு வரவேற்கத்தக்க விஷயம்‌  என்றார்

என்னுடைய அடுத்த படம் இன்றைய காலகட்ட இளைஞர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும் இளைஞர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பேசும் படமாக இருக்கும் - மதுரையில் நடிகர் விஜய் ஆண்டனி பேட்டி.

ரோபோடிக் அறுவைசிகிச்சை
 
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்துள்ள (மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி)மருத்துவமனையானது,ரோபோடிக் அறுவைசிகிச்சையில் 10 ஆண்டு கால நிபுணத்துவம் கொண்டுள்ளது. இந்த நிலையில், சிக்கலான பல அறுவைசிகிச்சைகளில் துல்லியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்து, சிகிச்சை முடிவுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் அடுத்த தலைமுறைக்கான அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை சாதனத்திற்கான தொடக்க விழா இன்று மாலை நடந்தது. பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மற்றும் முன்னணி நடிகர் பிரசாந்த் தியாகராஜன் ஆகியோர் இந்த அதிநவீன ரோபோடிக் சாதனத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்தனர். 
 
இதுகுறித்து டாக்டர் குருசங்கர் பேசுகையில், 
 
இந்த அதிநவீன ரோபோடிக் சாதனமானது, சமீபத்திய தலைமுறையைச் சேர்ந்த ரோபோடிக் அறுவைசிகிச்சைத் தளங்களில் ஒன்றாகும். 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பிரபல மருத்துவ நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. உலகளவில், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சைகளில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளத்தில் 3டி உயர்-வரையறை காட்சித்திறன், மருத்துவரது மணிக்கட்டின் அசைவுகளைப் பிரதிபலிக்கும் அதிநவீன ரோபோடிக் கருவிகள் மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகளின் போது மருத்துவ நிபுணர்களுக்கு உதவும் மேம்பட்ட இமேஜிங் திறன்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. குடல்-இரைப்பை சிகிச்சை, கல்லீரல்-பித்தநாளவியல், சிறுநீர்ப்பாதையியல், மகளிர் மருத்துவ பிரிவு, மார்பகம், தைராய்டு அறுவைசிகிச்சை, குழந்தைகளுக்கான அறுவைசிகிச்சைகள் உள்ளிட்ட பல சிக்கலான அறுவை சிகிச்சைகளை இந்த சாதனத்தை பயன்படுத்தி கொள்ள முடியும். மேம்பட்ட ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை எங்களது அறுவைசிகிச்சை நிபுணர்களின் நிபுணத்துவத்துடன் இணைப்பதன் மூலம், பாதுகாப்பான அறுவைசிகிச்சைகளை வழங்கி, விரைவில் வீடு திரும்ப வழி செய்கிறது. பல்வேறு சிக்கலான புற்றுநோய் அறுவை சிகிச்சைகளின் சிறப்புப் பிரிவுகளிலும் பயன்படுத்தலாம். உடலில் குறுகலான இடங்களில் அதிக துல்லியம் தேவைப்படும் அறுவைசிகிச்சைகளில் இது சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது. ரோபோடிக் அமைப்பு ஒருபோதும் தன்னிச்சையாக செயல்படாது. ஒவ்வொரு அசைவும் அறுவைசிகிச்சை நிபுணரால் பிரத்யேக கன்சோலில் இருந்து முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. டாக்டர்களின் கைகளின் இயற்கையான நடுக்கத்தை விலக்கி, மிக நுட்பமான மற்றும் கடினமான பகுதிகளிலும் கூட சிறப்பான துல்லியத்தை உறுதிசெய்கிறது என்று  கூறினார்.
 
தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், 
 
திரைப்படம் வாயிலாக ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த காலத்திற்கு ஏற்ப விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் நான் அனைத்து நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பு மதுரையில் தன் நடைபெற்று கொண்டிருக்கிறது எனது அடுத்த படத்தின் கதைக்களம் இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும்  இளைஞர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பேசும் படமாக இருக்கும், இன்றைய காலகட்ட இளைஞர்கள் குழந்தைகள் என அனைவரும் ஸ்ட்ரெஸ் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் அதற்கு முறையான உடற்பயிற்சிகள் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், வெளிநாடுகளில் மட்டுமே பயன்படுத்தி வந்த இது போன்ற கருவிகள் தற்போது நம் மாநிலத்திலும் அதுவும் மதுரையில் பயன்படுத்தப்பட உள்ளது ஒரு வரவேற்கத்தக்க விஷயம்‌  என்றார்

Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய் ஆண்டனி, பிரசாந்த் தொடங்கி வைத்த அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை: மதுரைக்கு புதிய மைல்கல்!
விஜய் ஆண்டனி, பிரசாந்த் தொடங்கி வைத்த அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை: மதுரைக்கு புதிய மைல்கல்!
பழனி தண்டபாணி மடம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
பழனி தண்டபாணி மடம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
விருதுநகர்: மாற்றுத்திறனாளிகள் வாழ்வை மேம்படுத்த திருச்சுழியில் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு!
விருதுநகர்: மாற்றுத்திறனாளிகள் வாழ்வை மேம்படுத்த திருச்சுழியில் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு!
மதுரையில் வெளுத்து வாங்கும் வெயில்... நீர் மோர் பந்தலோடு புளியோதரையும் வழங்கப்பட்ட சுவாரஸ்யம் !
மதுரையில் வெளுத்து வாங்கும் வெயில்... நீர் மோர் பந்தலோடு புளியோதரையும் வழங்கப்பட்ட சுவாரஸ்யம் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget