மேலும் அறிய

விருதுநகர்: மாற்றுத்திறனாளிகள் வாழ்வை மேம்படுத்த திருச்சுழியில் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு!

வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல், உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பித்தல், புகார்கள் பரிசீலித்து தீர்வு காண வழிகாட்டுதலுகள் போன்றவைகளும் வழங்கப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, திருச்சுழியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தினை (One stop center) திறந்து வைத்தார்.

ஒருங்கிணைந்த சேவை

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி  அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று (30.07.2026)  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் ரூ.29 இலட்சம் மதிப்பீட்டில்  புனரமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தினை திறந்து வைத்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் 1 மாற்றுத் திறனாளிக்கு ரூ.14,000- மதிப்புள்ள மூன்று சக்கர வண்டியையும் (Try Cycle), 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000- மதிபுள்ள  பார்வையற்றோர்க்கான மடக்கு ஊன்றுகோலையும் (Blind Stick), 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9000- மதிப்புள்ள  செவித்திறன் குறையுடையோர்க்கான காது கேட்கும் கருவிகளையும் (Hearding Aid), 1 மாற்றுத் திறனாளிக்கு ரூ.900- மதிப்பீட்டில் முழங்கை ஊன்றுகோல் (Elbow Crutches) என மொத்தம் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24,900- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது...," மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம், உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது., விருதுநகர் மாவட்டத்தில்  கடந்த ஜூன்"2025 முதல் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம்  கடைக்கோடியில் வசிக்கின்ற ஒரு மாற்றுத்திறனாளிகள் கூட விடுபடாமல் கணக்கெடுத்து, அவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டை(UDID) மற்றும் மறுவாழ்வு சேவை வழங்குவதற்காக உலக வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 32,696 மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளனர்.

முன்களப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் 13 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு 6 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் (அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, இராஜபாளையம், விருதுநகர் - கன்னிசேரிபுதூர், வெம்பக்கோட்டை - கல்லமநாயக்கன்பட்டி) கடந்த மார்ச் 2026 ஆம் மாதம் முதல் தொடங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 13 வட்டார ஓரிட சேவை மையங்களில் திருச்சுழி ஒருங்கிணைந்த சேவை மையம் ரூ.29 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு இன்று (30.07.2026)  சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தில்   1 உளவியல் ஆலோசகர்(Counceller cum case worker),  1 தசைப்பயிற்சியாளர் (Physiotherapist), 2 சிறப்பு கல்வி பயிற்றுனர் (Special Educator - ID & Special Educator - HI),  3 சமூக ஒருங்கிணைப்பாளர் (Community Facilitators). 7 சமூக மறுவாழ்வு பணியாளர் (Community Rehabilitation Workers) மற்றும் இம்மையத்தின் பணியாளர்களை கண்காணிப்பதற்கு 1 வட்டார ஒருங்கிணைப்பாளர் என மொத்தம் 15 முன்களப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல்

மேலும் மையத்தில் சிறப்பு கல்வி, பிசியோ தெரபி, உளவியல் ஆலோசனை, மறுவாழ்வு உதவிக்கான ஆலோசனை உள்ளிட்ட  சேவைகள் வழங்கப்பட உள்ளது. இதர சேவைகளாக வாழ்க்கை திறன், கல்வி, பெற்றோர் பாதுகாவலர்களுக்கான பயிற்சி, UDID அட்டை விண்ணப்பிக்க, அரசு நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பித்தல், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்தல், வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல், உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பித்தல், புகார்கள் பரிசீலித்து தீர்வு காண வழிகாட்டுதலுகள் போன்றவைகளும் வழங்கப்பட உள்ளது. எனவே, அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இந்த சேவை மையத்தினை அணுகி பயன்பெறலாம் என மாவட்டஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா,தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
DMK vs TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
Hyundai Cars Price Hike: ஹூண்டாய் கார் வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; அடுத்த மாதம் விலைகள் உயருது; காரணம் இதுதான்
ஹூண்டாய் கார் வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; அடுத்த மாதம் விலைகள் உயருது; காரணம் இதுதான்
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Embed widget