மதுரை : அழகர்கோயிலில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் காட்டெருமை.. வீடியோ..
அழகர் கோவில் வனப்பகுதிகளில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் காட்டெருமை குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய அழகர்கோயில் தென் திருப்பதி, திருமாலிருஞ்சோலை என போற்றப்படுகிறது. பதினெட்டாம்படி கருப்பணசாமி, கள்ளழகர், பழமுதிர்சோலை முருகன் கோயில், ராக்காயியம்மன் கோயில் என ஏராளாமான கோயில்கள் அழகர்கோயிலில் உள்ளது. இதனால் தினம் தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் ப்ளாஸ்டிக்கு பைகள் மீதான தடையை மீறி வனப்பகுதிகள் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக்கை வனத்துறை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அழகர் கோவில் வனப்பகுதிகளில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் காட்டெருமை குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பு.
— Arunchinna (@iamarunchinna) July 6, 2022
ப்ளாஸ்டிக்கு பைகள் மீதான தடையை மீறி வனப்பகுதிகள் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் - வனத்துறை கண்காணிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.@SRajaJourno | @SelenaHasma pic.twitter.com/IbV0HjviaW