மேலும் அறிய
Advertisement
30 ஆயிரம் முதலீடு செஞ்சா ஒரு பவுன் தங்க காசு , ரூ. 7500 லாப பணம் - மோசடி கும்பலிடம் சிக்கியவர்கள் வேதனை !
30 ஆயிரம் முதலீடு செஞ்சா ஒரு பவுன் தங்க காசு , மாசம் 7500 ரூபாய் லாப பணம் என கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக நிதி நிறுவனத்தின் மீது மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
மதுரை மாநகர் பசுமலை பகுதியில் ஜே.ஆர்.ஜே., மார்க்கெட்டிங் தங்கம், வெள்ளி விற்பனை என்ற நிறுவனத்தில் பொதுமக்கள் தங்களது நிறுவனத்தில் 30 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் அந்த முப்பதாயிரம் ரூபாய் பணத்தை பயன்படுத்தி ஒரு பவுன் தங்கக்காசு வாங்கிக் கொள்ளலாம் எனவும், அந்த ஒரு பவுன் தங்க காசு மூலம் 30 நாட்களில் தங்களது நிறுவனம் மூலமாக செய்யப்படும் தங்க பொருட்களை செய்வதற்கு ஒரு பவுன் தங்க நாணயத்தை சேதாரமாக முப்பது நாட்கள் பயன்படுத்தி அதன் மூலம் வரும் லாபம் மாதம் 7500 ரூபாய் வழங்குவதாக கூறியுள்ளனர். இது குறித்து சுவரொட்டிகள் மூலமாகவும், செய்தி்தாள்களிலும் விளம்பரம் செய்துள்ளனர்.
இதனை நம்பி மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் முப்பதாயிரம் ரூபாய் முதல் பல லட்ச ரூபாய் வரைக்கும் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செலுத்தியவர்களுக்கு இரண்டு , மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக மாதம் தோறும் லாப பணம் 7500 ரூபாய் வழங்கியுள்ளனர். இதனையடுத்து மூன்று மாதங்களுக்கு பின்னர் லாப பணம் வராத நிலையில் முதலீடு செய்த பொதுமக்கள் நிறுவனத்தின் தலைவரான ஜெயராஜ் என்பவரை தொடர்புகொண்டு கேட்டபோது உங்களுடைய பணம் விரைவில் வரும் என கூறியுள்ளார். இதையடுத்தும் சில மாதங்கள் ஆகியும் பணம் பணம் வராத நிலையில் அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது ஜெயராஜ் இல்லாத நிலையில் வேலை ஆட்களை விசாரித்தால் இன்னும் சில நாட்களில் பணம் வரும் என கூறியுள்ளார்கள் .
தொடர்ச்சியாக பல மாதங்கள் ஆகியும் லாப பணம் வராத நிலையில் தங்களுக்கு லாப பணம் வேண்டாம் தாங்கள் கட்டிய டெபாசிட் தொகையை திரும்பி தருமாறு கேட்டுள்ளனர். அப்போது பணம் தருவதாக கூறி டெபாசிட் செலுத்தியதற்கான சீட்டுகளை பெற்றுக்கொண்டு பணம் தராத நிலையில் தாங்கள் தான் பணம் திரும்ப தர வேண்டும் எனக் கூறி டெபாசிட் செய்த நபர்களின் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் பணம் இழந்து மனம் நொந்து போன பொதுமக்கள் சிலர் மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். நாள்தோறும் நூதன முறைகளில் மோசடிகள் அரங்கேறிவரும் நிலையில் முப்பதாயிரம் முதலீடு செய்தால் மாதம்தோறும் 7500 கிடைக்கும் என மோசடி செய்த நபர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மீனாட்சியம்மன் கோயில் யானை உடல்நிலை வேகமாக சீராகி வருகிறது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion